கிராமசபை கூட்டங்களில் கிறிஸ்த வர்களும் பங்கேற்க போதிய விழிப்பு ணர்வு ஏற்படுத்தவும், அரசியல் விழிப் புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சர்வதேச கிறிஸ்தவ ஊழியர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சர்வதேச கிறிஸ்தவ ஊழியர்கள் கூட்டமைப்பின் 6-ம் ஆண்டு வருடாந்திர பொதுக்குழு கூட்டம், ஈரோடு நாடார் மேட்டில் உள்ள பெத்தானியா திருச்ச பையில் நடைபெற்றது. தேசிய பொதுச் செயலாளர் பேராயர் ஞானப் பிரகாசம் துவக்கி வைத்தார்.
கூட்டமைப்பின் தேசிய தலைவரும் பெத்தானியா திருச்ச பையின் பேராயருமான ஜென் சன் ஜெபராஜ் வரவேற்றார். தேசிய சட்டத்துறை செயலாளர் பால் விக்டர் தீர்மானங்களை வாசித்தார். சிறுபான்மை மக்கள் நலக்கட்சி தேசிய தலைவர் பேராயர் டாக்டர் சாம் இயேசுதாஸ் சிறப்புரையாற்றினார்.
தேசிய தலைவர் பேராயர் ஜென்சன் ஜெபராஜ் நன்றி கூறினார்.
கூட்டமைப்பின் தேசியத் தலைவர் பேராயர் ஜென்சன் ஜெபராஜ் சட்டத்துறை செயலாளர் பால் விக்டர் ஆகியோர் கூறியதாவது:
சர்வதேச கிறிஸ்தவ ஊழியர்கள் கூட்டமைப்பின் சார்பில் மத்திய, மாநில அரசிடம் கிறிஸ்தவர்களின் தேவைகள், உரிமைகள் சார்ந்த பிரச்சினைகளை கொண்டு சென்று அதன்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவும், தேவாலயங்கள் நடத்துவதில் உள்ள பிரச்சனைகளை தீர்க்கவும் பதிவுத்துறை, பதிவுதுறை சார்ந்த பணிகள், வருமானவரித்துறை அதைசார்ந்த பணிகள், டிரஸ்ட் சம்பந்தமான குழப்பங்களை தெளிவுபடுத்துவதற்கு அதனை அமைப்பதற்காக வழிமுறைகளை ஏற்படுத்தவும் அதற்கான ஆலோசனைகள் வழங்கவும் இந்த கூட்ட மைப்பு செயல்படும்.
கிராமசபை கூட்டம் நமது நாட்டின் மிகப்பெரிய வலிமையான அமைப்பாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
ஆகவே ஆங்காங்கு நடை பெறும் கிராமசபை கூட்டங்களில் கிறிஸ்தவர்களும் பங்கேற்க போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த கூட்டமைப்பு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த கூட்டமைப்பில் டெல்லி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் நெல்சன், சென்னை உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரபாகர், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் டேனியல் கார்த்திக், லயோலா கல்லூரி சட்ட ஆலோசகர் ஆரோக்கியசாமி, ஈரோடு வழக்கறிஞர் ராஜா, கரூர் ராஜேந்திரன், மீனாட்சி ஆகியோர் சட்ட ஆலோசனை வழங்கி வருகின்றனர் என்றனர்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
சமீபகாலமாக மத்திய அரசு கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதனால் இந்த தொண்டு நிறுவனங்கள் மூலம் ஏழை மக்களுக்கும் ஏழை குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டிய பல்வேறு உதவிகள் தடைபட்டுள்ளது.
குறிப்பாக கம்பேஷன் இன்டர்நேஷனல் என்ற இந்தியாவிலுள்ள மிகப்பெரிய தொண்டு நிறுவனத்தின் செயல்பாடுகளை முடக்கி வைத்துள்ளதால் லட்சக்கணக்கான ஏழை மக்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிறுவனத்தில் பணிபுரிந்த அலுவலர்களும் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். எனவே மத்திய அரசு இதுபோன்ற கட்டுப்பாடுகளை தளர்வு செய்து ஏழை பொதுமக்கள் உதவி பெற தொண்டு நிறுவனங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பதவியேற்று தமிழகத்தில் நல்லாட்சி செய்துவரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
கொடிய கொரோனா இரண்டாம் அலையை, சிறப்பாக பணியாற்றி கட்டுப்படுத்தியதற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற அனைத்து அரசியல் இயக்கங்களுக்கும் நல்லாட்சி அமைவதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
புதிதாக பொறுப் பேற்றுள்ள மைனாரிட்டி கமிஷன் தலைவரும், இந்திய காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவருமான பீட்டர் அல் போன்ஸுக்கு இக்கூட்டமைப்பு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
தமிழகத்தில் உள்ள திருச்சபைகளுக்கு சில மதவாத தீவிரவாதிகள்தவறானதகவல்களை வைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளை திருச்சபை நடத்த விடாமல் தடுப்பதை முதல்வர் மற்றும் மைனாரிட்டி கமிஷன் தலைவர் தலையிட்டு கிறிஸ்தவர்களுக்கான பாதுகாப்பினை வழங்க வேண்டும்.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் கிறிஸ்தவர்களுக்கு பொதுகல்லறை இல்லை. கிறிஸ்தவர்களுக்கு என்று அனைத்து மாவட்டங்களிலும் தனி கல்லறை ஏற்படுத்தி தர வேண்டும்.
சமூக ஊடகங்களில் மற்றும் இணையதளத்திலும் கிறிஸ்தவர்கள் பற்றிய தவறான கருத்துகளை பதிவிட்டு வருவதை, அரசு தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் தமிழகத்தில் அனைத்து மாவட்ட, மாநில மண்டல மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.



