கோவை வடக்கு வட்ட மேசை 20, விளாங்குறிச்சி சிவராம் நகரில் மியாவாக்கி வனத்தை உருவாக்கும் நோக்கில், கோகிரீன் ( ‘Go Green’)முயற்சியின் ஒருபகுதியாக, 1500 மரக்கன்றுகள்நடப்பட்டன.
கோவை வடக்கு வட்ட மேசை 20-ன் தலைவர் திபேந்தர் சிங், அமைப்பின் அதிகாரப்பூர்வ தகவல் மூலம் இதனைத் தெரிவித்தார்.
மியாவாக்கி காடு என்பது ஒரு சிறிய பரப்பளவில் அதிக மரக்கன்றுகளை நட்டு, அப்பகுதியை வனம் போல் ஆக்குவது.
இது ஜப்பானியர்களின் யோச னையாகும். கோவை மாநகராட்சியால் ஒதுக்கப் பட்டநிலத்தில் மரங்கள் நடப்பட்டன. இது சைநிடர் எலெக்ட்ரிக் (Schneider Electric) நிறுவனத்தால் சிஎஸ்ஆர் (CSR) கூட்டாளராகவும், பங்காளராக (Com munitree) இணைந்து செயல்படுத்தும் கூட்டுத் திட்டமாகும்.



