fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் இணைப்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் இணைப்பு விழா

கோவை பச்சாபாளையத்தில் உள்ள தன்னாட்சி நிறுவனமாகிய ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில் நுட்பக்கல்லூரியின் 20-வது முதலாம் ஆண்டு மாணவ, மாணவியர் இணைப்பு விழா இணைய வழியில் சிறப்பாக நடைபெற்றது.


விழாவின் சிறப்பு விருந்தினராக பங் கேற்ற பேராசிரியர் எம்.ராமச் சந்திரன் பேசும்போது, இன்றைய நவீன உலகில் தடையை மீறி வெற்றி பெறுவது எவ்வாறு என்பதை மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். உறுதியாக இருக்கா விட்டால், வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடி யாது.


நினைத்தது அனைத்தும் நடக்காது; ஆனால் நாம் நல்லதையே நினைக்க வேண்டும்; அதை செயல்படுத்த உறுதியாக உழைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

எஸ்.என்.ஆர். சன்ஸ் சாரிடபிள் டிரஸ்டின் நிர்வாக அறங்காவலர்டி.லஷ்மி நாராயண சுவாமிதலைமை தாங்கி பேசுகையில், கல்லூரியில் உள்ள கட்டமைப்பு வசதி களை நல்லமுறையில் பயன்படுத்தி, தனித் திறமைகளை வளர்த்துக் கொண்டு வாழ்வில் மிக உயரிய நிலையை அடைய வேண்டும் என்று வாழ்த்தினார்.


கல்லூரி முதல்வர் முனைவர் எம்.பால்ராஜ் வர வேற்றார். கட்டிட பொறியியல் துறைத் தலைவர் முனைவர் கே.முரளி நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img