fbpx
Homeபிற செய்திகள்இளமைத் துள்ளலுடன் விவோ ஒய்3எஸ் ஸ்மார்ட்போன்

இளமைத் துள்ளலுடன் விவோ ஒய்3எஸ் ஸ்மார்ட்போன்

உலகளாவிய புதுமைமிக்க ஸ்மா ர்ட்போன் பிராண்டாக திகழும் விவோ தனது புதிய விவோ ஒய்3எஸ் மாடல் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இது இளமைமிக்க ஒய் வரிசை மாடலின் புதிய வரவாகும். இந்த விவோ ஒய்3எஸ் ஸ்மார்ட்போனில் உள்ள செயல்திறன்மிக்க சிறப்பு அம்சங்கள் மற்றும் தனித்துவமான வடிவமைப்பு ஆகியவை வாடிக் கையாளர்களுக்கு சிறந்த அனுபவத் தை வழங்கும்.

2ஜிபி ரேம் மற் றும் 32ஜிபி மெமரி கார்டுடன் வெளி வந்துள்ள இதன் விலை 9,490 ரூபாய். இதன் மெமரி கார்டை 1டிபி வரை நீட்டித்துக் கொள்ளும் வசதி இதில் உள்ளது. பியர்ல் ஒயிட், மின்ட் கிரீன், ஸ்டாரி ப்ளூ ஆகிய 3 வித வண்ணங்களில் இந்த புதிய ஒய்3எஸ் ஸ்மார்ட்போன் விவோ இந்தியா இ&-ஸ்டோர், அமேசான்.இன், பிளிப்கார்ட், டாடா கிளிக், பேடிஎம், பஜாஜ் பின்செர்வ் இஎம்ஐ ஸ்டோர் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள ஆப்லைன் ஸ்டோர்களில் தற்போது கிடைக்கிறது.

புதிய ஸ்மார்ட்போன் குறித்து விவோ இந்தியாவின் பிராண்ட் ஆலோசனை இயக்குனர் நிபுன் மரியா கூறுகையில், இள மை மிக்க ஒய் வரிசையில்எங்க ளின் தற்போதைய புதிய வரவான ஒய்3எஸ் ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான அனுபவத்தை வழங்கும்.

இந்த மாடலில் பெரிய பேட்டரி மற்றும் பெரிய டிஸ்பிளே போன்றவை வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கிறது என்றார்.
மெல்லிய வடிவமைப்பில் வெளி வந்துள்ள ஒய்3எஸ் ஸ்மார்ட் போன் அழகிய தோற்றத்தைக் கொண் டுள்ளது.

இதில் எச்டி பிளஸ் (1600வூ720) ரெசல்யூசன் உடன் 16.55செ.மீ. (6.5 இன்ச்) புல் வியூ டிஸ்பிளே உள்ளது. இதில் உள்ள பில்டர்கள் கண்களுக்கு கெடுதல் ஏற்படுத்தும் ஒளிக்கதிர்கள் வெளியேறாமல் தடுக்கின்றன. இதன் செயல்திறனை அதிகரிக்கும் விதமாக இந்த புதிய ஸ்மார்ட்போன் ஐமேனேஜருடன் வருகிறது.

இது வேண்டாத பைல் களை கிளீன் செய்வதோடு இர வில் ஸ்கேன் செய்து அதில் உள்ள பிரச்சினைகளை நீக்கி, ஸ்மார்ட் போன் நன்றாக இயங்குவதற்கு உதவுகிறது. 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதால் எந்தவித தொந்தரவும் இல்லாமல், நாள் முழுவதும் இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்தலாம்.

படிக்க வேண்டும்

spot_img