கோவை, துடியலூர் சி.கே.மஹால் அரங்கில் மார்ட்டின் அறக்கட்டளை சார்பாக மாணவர்களுக்கு ரூபாய் 1 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (21ம் தேதி) நடைபெற்றது.
அதுபற்றிய விவரம் வருமாறு: கோவையில் 2021&2022 கல்வியாண்டிற்கான பள்ளி,கல்லூரிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி கோவை துடிய லூர் பகுதியில் உள்ள சி.கே.மஹாலில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மார்ட்டின் அறக்கட்டளை யின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டின் கலந்து கொண்டு 250 மாணவர்களுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள வரை வோலை (DD) வழங்கி மாணவர்களிடையே உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது, மார்டின் அறக்கட்டளை சார்பாக பள்ளி கல்லூரி மாணவர்க ளுக்கு தொடர்ச்சியாக பல்வேறு உதவிகளை செய்து வருகிறோம்.
அது மட்டுமில்லாமல் மாணவர்களின் கல்வித் தரம் மேம்படுத்தும் வகையில் பல்வேறு முயற்சிகளை மார்ட்டின் அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது.
மேற்கண்டவாறு அவர் கூறினார்.
முன்னதாக விழாவில் முன்னாள் போலீஸ்துறை அதிகாரி ஜி.கே.ராணி, டாக்டர் ஜி.பி.கோதன வள்ளி, மெஜஸ்டிக் முன்னாள் மாவட்ட ஆளுநர் மனோகரன் மற் றும் பார்வதி ரவிச்சந் திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.



