கட்டுமான நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் ஸ்டேட் வங்கி பொதுமேலாளர் நீரஜ்குமார் பாண்டா அறிவிப்பு
பாரத ஸ்டேட் வங்கி சார்பாக வீடுகளுக்கு கடன் வழங்குவது தொடர்பாக கட்டுமான நிறுவனர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.
பொதுத்துறை வங்கிகளில் முன்னணி வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வீட்டு கடன் தொடர்பான சலுகைகளை அறிவித்துள்ளது.
இந்நிலையில் வீட்டு கடன் தொடர்பாக கட்டுமான நிறுவனர் களுடனான சந்திப்பு நிகழ்ச்சி கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. இதில் கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த கட்டு மானத் துறையைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கியின் பொதுமேலாளர் நீரஜ் குமார் பாண்டா செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாரத ஸ்டேட் வங்கி வீட்டுக் கடன் திட்டத்தில், பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது, வீடுகளை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் மற்றும் கட்டுமானர்கள் இடையே நல்ல புரிதலை ஏற்படுத்துவதற்காக இந்த சந் திப்பு நிகழ்வு நடைபெறுகிறது.
கட்டுமான நிறுவனங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக்கடன் வழங்க எஸ்.பி.ஐ. வங்கி தயாராக இருக்கிறது. கட்டுமானத் துறையில் வேகமாக வளர்ந்து வரும் கோவை மாவட்ட வாடிக்கையாளர்களுக்கு வங்கி தரமான, விரைவான சேவை வழங்க தயாராக உள்ளது
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பேட்டியின் போது துணைப் பொது மேலாளர் திலீப் சிங் யாதவ் மற்றும் ரியல் எஸ்டேட் துணைப் பொது மேலாளர் ரவிக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.



