fbpx
Homeபிற செய்திகள்சர்வதேச சதுரங்கப் போட்டியில் உலக சாம்பியன்களை பின்னுக்கு தள்ளி ஈரோடு தமிழர் முதல் இடம்

சர்வதேச சதுரங்கப் போட்டியில் உலக சாம்பியன்களை பின்னுக்கு தள்ளி ஈரோடு தமிழர் முதல் இடம்

ஸ்பெயின் நாட்டில் லா- நுசியா நகரில் நடைபெற்ற சர்வதேச ஓப்பன் 2021 செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் இனியன் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ஸ்பெயினில் உள்ள லா – நுசியா சர்வதேச ஓபன் 2021 செஸ் சாம் பியன்ஷிப் போட்டி தொடர் கடந்த 5 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 14 நாடுகளை சார்ந்த 88 சர்வதேச சதுரங்க வீரர்கள் போட்டியிட்டனர்.

இந்தியா சார்பாக ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் இனியன் பங்கேற்றார். 9 சுற்றுகளாக நடைபெற்ற கிளாசிக்கல் பிரிவில் 6 போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டு போட்டிகளை சமன் செய்து 7 புள்ளிகளுடன் கிராண்ட் மாஸ்டர் இனியன் முத லிடம் பிடித்தார்.

இந்த போட்டியில் சிலியை சேர்ந்த ரோட்ரிகோ வாஸ்சியூஸ் 2ம் இடத்தையும், உக்ரைன் நாட்டின் ஆண்ட்ரோ சுமித் 3ஆம் இடமும் பிடித்தனர்.
இந்தப் போட்டியில் இனியன் ஏற்கனவே ஒப்புக்கொண்ட சூப்பர் செஸ் லீக் ஆன்லைன் போட்டியில் பங்கேற்றதால், இந்த போட்டியின் 8வது சுற்றில் விளையாட முடியவில்லை.

இருப்பினும் ஆன்லைன் போட்டியில் இஸ்ரேலின் போஸ்ட் னி இவ்ஜெனி, சிலி நாட்டின் ரோட்ரிகோ வாஸ்சியூஸ், ஸ்பெயின் நாட்டின் வஸ்செல்லோ பெரோச், கியூபாவின் லியோன் வால்டஸ் என முக்கிய வீரர்களை வீழ்த்தி முதலிடம் பிடித்தார்.

சென்னையைச் சேர்ந்த விஸ் வேஸ்வரன், இனியனுக்கு 10 ஆண்டுகளாக பயிற்சியளித்து வருகிறார். கோவை தனியார் கலை அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் இனியன் வெற்றி பெற்றிருப்பது அவர்கள் குடும்பத்தினர் மட்டுமின்றி சதுரங்க விளையாட்டில் ஈடுபட்டு வரும் இளம் தலைமுறையினருக்கும் உத்வேகம் அளிப்பதாக அமைந்துஉள்ளது.

படிக்க வேண்டும்

spot_img