கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மாதம்பட்டி ஊராட்சியில், 3வது வார்டு உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தல் கடந்த 9ம் தேதி மாதம்பட்டியில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் நடந்தது.
இதில் அ.தி.மு.க.சார்பாக கார்த்திக் ராஜா, தி.மு.க.சார்பாக சிவப்பிரகாஷ், மற்றும் சுயேட்சை வேட்பாளர் உதய குமார் ஆகியோர் என 3 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கை நடைபெற்றதில் மாதம்பட்டி 3-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் சிவப்பிரகாஷ் 259 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் கார்த்திக் ராஜா 190 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்



