இலவச மார்பகம் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்று நோய் முகாமிற்கென நிதி திரட்டும் வகையில் கோவை ரோட்டரி கோயம்புத்தூர் சிட்டி சார்பாக ஆர்.சி.சி. டென்னிஸ் சாம்பியன் ஷிப் எனும் இரண்டு நாள் டென்னிஸ் போட்டி கோவை கே.ஜி.ரமேஷ் டென்னிஸ் அகாடமி வளாகத்தில் நடைபெற்றது.
இதன் துவக்க விழா நிகழ்ச்சிக்கு ரோட்டரி கோயம்புத்தூர் சிட்டி தலைவர் டாக்டர் செந்தில் குமார்,,செயலாளர் கணேசன்,ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆளுநர் ராஜசேகர் ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.
இதில் கேரளா, தமி ழகம் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ரொட்டேரியன்கள் வயது வித்தியாசமின்றி போட்டியில் கலந்து கொண்டு விளையாடினர்.
ரோட்டரி கோயமுத்தூர் சிட்டியின் செயல்பாடுகள் குறித்து அதன் தலைவர் டாக்டர் செந்தில் குமார் கூறுகையில், ரோட்டரி கோயம்புத்தூர் சிட்டி சார்பாக புத்துயிர் எனும் திட்டத்தின் கீழ் மருத்துவ உதவி,பசிப்பிணி போக்குவது ,கல்வி கூடங்கள் கட்டி கொடுப்பது என பல்வேறு சமுதாயம் சார்ந்த சேவைப் பணிகளை மேற் கொண்டு வருவத £கவும்,தற்போது சர்க்கரை நோயால் சிறுநீரகம் பாதிப்படைந்து டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படும் நலிவடைந்த ஏழை நோயாளிகளுக்கு அன்னூரில் சிகிச்சை வழங்க புதிய மையம் துவங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆர்.சி.சி.சாம்பியன்ஷிப் துவக்க விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக ரவிக்குமார், குமரேசன்,பாண்டியன், குண சேகரன் உட்பட பல்வேறு ரோட்டரி மாவட்ட சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.



