Homeபிற செய்திகள்டாக்டர் மகாலிங்கம் தொழில் நுட்பக் கல்லூரி, கேப் ஜெமினியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

டாக்டர் மகாலிங்கம் தொழில் நுட்பக் கல்லூரி, கேப் ஜெமினியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில் நுட்பக் கல்லூரி, கேப்ஜெமினி இன் ஜினீயரிங் (Capgemini Engineering) இந்தியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டது.

பெங்களூருவில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கேப்ஜெமினி இன்ஜினீயரிங்கின் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் சந்திரா ரெட்டி, நிர்வாக துணைத் தலைவர் பிரசாத் ஷெட்டி, துணைத் தலைவர்அனந்தகுமார் மணி, மகாலிங்கம் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் ஆ. ரத்தினவேலு, இயந்திரவியல் துறை தலைவர் முனைவர் ஐ. ராஜேந்திரன், வேலை வாய்ப்பு பிரிவின் தலைவர் சேவுகமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் கேப் ஜெமினி இன்ஜினீயரிங் இந்தியா நிறுவனம், தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக சீமென்ஸ் பிஎல்எம் டீம் சென்டர் (Siemens PLM Teamcenter) மென்பொருளைக் கொண்டு “உற்பத்தி சார் வாழ்க்கைச் சுழற்சி மேலாண்மைத் தொழில் நுட்ப ஆய்வகம்” தொடங்குவதற்கு மகாலிங்கம் பொறியியல் கல்லூரியைத் தேர்வு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் பயனாக கல்லூரியில் இயந்திரவியல் மற்றும் வாகனவியல் துறையில் பயிலும் 50 மாணவர்களுக்கு கேப்ஜெமினி இன்ஜினீயரிங் இந்தியா நிறுவனத்தில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில் நுட்பக் கல்லூரியானது 23 வருட கல்விச் சேவையுடன் பத்து வருடங்களுக்கு மேலாக தன்னாட்சி அந்தஸ்துடன் விளங்குகிறது.

என்ஏசி எனும் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார நிறுவனம் , மகாலிங்கம் பொறியியல் ல்லூரிக்கு உயரிய “ஏ++” தரச்சான்றிதழ் வழங்கி கௌரவித்துள்ளது.

தொடர்ச்சியாக 2013-&2018 மற்றும் 2018–&2023 ஆண்டுகளில் தமிழகத்தில் உயரிய தரச்சான்றிதழ் பெற்ற ஒரே தொழில் கல்வி நிறுவனமாக மகாலிங்கம் பொறியியல் கல்லூரி விளங்குகிறது.

கேப்ஜெ மினி நிறுவனம் உலகளவில் பல்வேறு நிறுவனங்களின் கூட்டு முயற்சியுடன் தொழில்நுட்ப ஆற்றலைப் பயன்படுத்தி தங்கள் வணிகத்தை மாற்றுவதற்கும் நிர்வகிப்பதற்கும் செயலாற்றி வருகிறது.

கேப்ஜெமினி நிறுவனம் சர்வதேச அளவில் 3 லட்சம் பணியாளர்கள் மற்றும் இந்திய அளவில் 1.5 லட்சம் பணியாளர்களுடன் இயங்கி வருகிறது.

படிக்க வேண்டும்

spot_img