fbpx
Homeபிற செய்திகள்இரவில் சிக்கன் சாப்பிட்ட முதியவர் பலி

இரவில் சிக்கன் சாப்பிட்ட முதியவர் பலி

கோவை நல்லாம்பாளையம் அமர தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் உஸ்மான் என்பவரின் மகன் சமீம்( 60). இவர் கடந்த 25 வருடங்களுக்கு முன்பு பீகார் மாநிலத்தில் இருந்து கோவைக்கு வந்து பணிபுரிந்து வந்தார்.

கடந்த சில மாதங்களாக வருடங்களாக நல்லாம் பாளையத்தில் உள்ள சபரி கிட்சன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு அவரது மகன் முகம்மது சந்த் (24) கோவைக்கு வந்து தந்தையோடு தங்கி வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சாப்பாடு மற்றும் சிக்கன் வாங்கி வந்து சமீம் சாப்பிட்டுள்ளார்.

நேற்று அதிகாலை திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் .ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சமீம் பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

படிக்க வேண்டும்

spot_img