fbpx
Homeபிற செய்திகள்கோவை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை துவக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை துவக்கம்

கோவை அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை மற்றும் காற்றழுத்தம் மாற்றம் உறிஞ்சி மானியை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

பாரதப் பிரதம மந்திரியின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதியிலிருந்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஆக்சிஜன் நிறுவப்பட்டுள்ளது இதனை இன்று பிரதமர் நரேந்திர மோடி காணொளிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதேபோல உறிஞ்சி மானி அலகையும் பிரதமர் துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட கலெக் டர் சமீரன், நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கோவை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனை முதல்வர் நிர்மலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img