fbpx
Homeபிற செய்திகள்கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் ஹெச்பி வாடிக்கையாளர்களுக்கு சிறப்புப் பரிசு திட்டம் துவக்கம்

கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் ஹெச்பி வாடிக்கையாளர்களுக்கு சிறப்புப் பரிசு திட்டம் துவக்கம்

தீப ஒளித் திருநாளை முன்னிட்டு, ஹிந்துஸ்தான் பெட்ரொலியம் நிறுவ னத்தின் புதிய எரிவாயு இணைப்பு பெறும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்புப் பரிசு பொருட்கள் வழங்கும் திட்டத் துவக்க விழா நடைபெற்றது.

ஹிந்துஸ்தான் பெட் ரோலியம் நிறுவனத்தின் சார்பில், மக்களுக்கு ஹெச்பி என்ற எரிவாயு இணைப்பை வழங்கி வருகின்றனர். புதிய வாடிக்கையாளர்களை வரவேற்கும் வகையில், சிறப்புச் சலுகைகளையும், பரிசுகளையும் ஆண்டு தோறும் வழங்கி வருகின்றனர்.

இந்த ஆண்டில், கோவையில் ஹெச்பி கேஸ் நிறுவனத்தின் கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கேரள மாநிலம் கொச்சி, ஹெச்பி எல்பிஜி நிறுவனத்தின் முதன்மை மண்டல மேலாளர் சுனில்குமார், புதிய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சிறப்புப் பரிசுகள் வழங்குவது குறித்து விநியோகஸ்தர்கள் மத்தியில் பேசினார்.

வாடிக்கையாளர்கள் சேவையில் குறைகள் வைக் கக்கூடாது, சிலிண்டர் புக் செய்த இரு நாட்களுக்குள் எரிவாயு உருளை சென்றடைய வேண்டும், வாடிக் கையாளர்கள் குறை தெரிவிக்காத வண்ணம் பணிகளை மேற் கொண்டால் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள் என்றும் தெரிவித்தார்.

வரும் தீபாவளி பண்டி கையை முன்னிட்டு ஹெச்பி எல்பிஜி நிறுவனத்திற்கு புதிய வாடிக்கையாளர்களை வரவேற்கும் வகையில், சிறப்புப் பரிசுகள் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து, புதிய இணைப்புடன் பரிசுக ளையும் வழங்கினார்.
இந்த திட்டமானது கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஹெச்பி எல்பிஜி நிறுவனத்தின் அனைத்து கிளைகளிலும் 06.10.2021 முதல் 04.11.2021 வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

பாலக்காடு ஹெச்பி பிளான்ட் மேலாளர் ஏ,தாஜிப்சேட், விற்பனை அதிகாரி வெங்கடேஷ், ஹெச்பி எரிவாயு விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் பி.இராஜேந் திரா, சிவானந்த வடிவேல், இரத்தினவேல், கோவை மாவட்ட சுபா எரிவாயு உரிமையாளர் ஏ.தங்க மாயாண்டி, வசந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img