fbpx
Homeபிற செய்திகள்லோக் ஜன சக்தி கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் இன்றைய அரசியல் நிலை பற்றி கலந்துரையாடல்

லோக் ஜன சக்தி கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் இன்றைய அரசியல் நிலை பற்றி கலந்துரையாடல்

இன்றைய அரசியல் நிலை குறித்து லோக் ஜன சக்தி கட்சியின் செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

மறைந்த தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் உருவாக்கிய லோக் ஜனசக்தி கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம், அக்கட்சியின் தேசிய பொது செயலாளர் ஜி.வி. மணிமாறன் தலை மையில் கோவை யில் நடந்தது.

மாநில செயலாளர்கள் பழனிசாமி, சசி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கட்சியின் செயல்பாடுகள், கட்சியின் வளர்ச்சி, பொது மக்களிடத்தில் கட்சி யின் கொள்கை, கோட்பாடுகளை கொண்டு சேர்க்கும் வகையில் இக் கூட்டம் நடைபெற்றது.

இன்றைய அரசியல் நிலைகுறித்தும், கட்சியின் நிலைப்பாடு குறித்தும் மணி மாறன், நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஜி.வி.மணி மாறன் கூறியதாவது: ராம்விலாஸ் பஸ்வான் உருவாக்கிய இந்த கட்சி, தற்போது மத்திய உணவு பதப்படுத்தும் துறை அமைச்சராக இருக் கக்கூடிய, பசுபதி குமார் பராஸ், உடன் இணைந்து பயணிக்கும் கட்சியின், தமிழக பிரிவு இதுவாகும். இக்கட்சியின்நோக்கமே, சமூகநீதி, பெண் களுக்கான கல்வி, பெண்களுக்கான விடுதலை போன்ற பல்வேறு அடிப்படை கொள்கைகளை கொண்டு செயல்பட்டு வருகிறது. ராம்விலாஸ் பஸ்வான் நினைவுநாள், வரும் 8-ம் தேதி வருகிறது.

அதனை தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் அனுஷ்டிக்க திட்ட மிட்டு உள்ளோம்.

இதன் மூலமாக தமிழகத்தில் மிகப்பெரிய அளவில்மக்கள்மத்தியில், எங்களது கட்சியினை பலப்படுத்த திட்டமிட்டு இருக்கிறோம் என்றார்.

ஜனசக்திலேபர் யூனியன் அமைப்பின் தலை வர் துரைராஜ், மாவட்ட விவசாய பிரிவு தலைவர் பிரகாஷ் பஸ் வான், திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரசாமி, பாலாஜி, தொகுதி தலைவர் சந்திரசேகரன், புரசை லோகநாதன், ஜனசக்தி மஸ்தூர் சபாவின்பொதுச் செயலாளர் சத்ய நாராய ணன் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img