ஒன்றரை ஆண்டுகளுக் குப் பின் கோவை மாவட் டத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று (அக்.4) நேரடியாக நடைபெற்றது.
கொரோனா பரவல் காரணமாக, கடந்தஆண்டு முதல், மக்களிடம் மாவட்ட ஆட்சியர் நேரடியாக மனுக்களை வாங்கும் நடைமுறை நிறுத்தப்பட்டது.
பொது மக்கள் மனுக்களை பெட்டியில் தான் போட்டு வந்தனர்.
அரசு உத்தரவுக் குப் பின், நேற்று முதல் மீண்டும் மக்கள் நேரடியாக ஆட்சியரிடம் மனு அளிக்கும் நடைமுறை துவங்கியது. இதனால் ஆட்சியர், மக்களிடம் நேரடியாக மனுக்களைப் பெற்று கொண்டார்.
இனி வரும் நாட்களில் வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் குறை தீர்ப்பு முகாம் நடைபெறும்.
நீண்ட நாட்களுக்குப் பின் நேரடி மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெறுவதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
மக்கள் தனிமனித இடை வெளியை பின்பற்ற வேண்டும் எனவும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.



