fbpx
Homeபிற செய்திகள்நந்தா இயன்முறை கல்லூரிகளின் சார்பில் உலக இதயதின விழிப்புணர்வு கருத்தரங்கம்

நந்தா இயன்முறை கல்லூரிகளின் சார்பில் உலக இதயதின விழிப்புணர்வு கருத்தரங்கம்

“இதயத்துக்கு இதமான சூழலை உரு வாக்குவோம்” என்ற கருப்பொருளை முன் னிருத்தி உலக இதய தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நந்தா இயன்முறை மற்றும் துணை மருத்துவ கல்லூரிகளின் சார்பில் கருத்தரங்கம் நேற்று (செப்.29) நடை பெற்றது.

ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் வி.சண்முகன் தலைமை தாங்கினார். சுருதி கிளினிக் மருத்துவர் வி.எழில் சரவணன், இயன்முறை மருத்துவர் எஸ்.வி. சதீஸ்குமார் ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத் தனர். இயன்முறை கல்லூரியின் முதல்வர் மருத்துவர் வி. மணிவண்ணன் வரவேற்றார்.

இதயநோய் வருவ தற்கான அறிகுறிகள் மற்றும் காரணங்களை மருத்துவர் வி.எழில்சரவணன், இதயநோய்கள் வருவதனை தடுப்பதற்கான வழிமுறைகளை இயன்முறை மருத்துவர் எஸ்.வி. சதீஸ்குமார்ஆகியோர் ஒளிப்பட வாயிலாக மாணவர்களுக்கு விளக்கினர்.

உலக இதய தினத்தினை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியினை சிறப்பு விருந்தினர்கள் மற்றும் ஆசிரியர்கள் பார்வையிட்டு மதிப்பீடு செய்தனர். சிறப்பாக கண்காட்சியினை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பரிசு களை வழங்கி கவுரப்படுத்தினர்.
கருத்தரங்கு மற்றும் கண்காட்சி ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்த துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலர் எஸ். நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவ னங்களின் செயலர் எஸ். திருமூர்த்தி, முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் எஸ்.ஆறுமுகம் முதன்மை நிர்வாக அலுவலர் கே.கிருஷ்ணமூர்த்தி மற்றும் கல்லூரி உறுப்பினர்கள் பாராட்டினர்.

படிக்க வேண்டும்

spot_img