fbpx
Homeபிற செய்திகள்உக்கடம் சி.எம்.சி.காலனியில் வீடுகள் இடிக்கும் பணி துவங்கியது மேம்பால பணி தீவிரம்

உக்கடம் சி.எம்.சி.காலனியில் வீடுகள் இடிக்கும் பணி துவங்கியது மேம்பால பணி தீவிரம்

உக்கடம் மேம்பால கட்டுமானப் பணிக்காக சி.எம்.சி காலனி பகுதியில் உள்ள 100 வீடுகளை இடிக்கும் பணி நேற்று துவங்கியது.

கோவை உக்கடம்-ஆத்துப்பாலம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.430 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பால பணி நடைபெற்று வருகிறது.

இந்த மேம்பால கட்டுமான பணிக்காக 4 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்காக உக்கடம் சி.எம்.சி. காலனியில் உள்ள 157 வீடுகள் கடந்த ஜூலை மாதம் இடிக்கப்பட்டன. இந்நிலையில் ஆத்துப் பாலத்தில் இருந்து வருகிற வாகனங்கள், ஓப்பணக்கார வீதி செல்வதற்காக உக்கடத்தில் இறங்குதளம் அமைக்கப்பட உள்ளது.

இப்பணிக்காக சி.எம்.சி.காலனியில் உள்ள 100 வீடுகளை இடிக்கும் பணி நேற்று துவங்கியது. இந்த பணியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் ஈடு பட்டு வருகின்றனர்.

இந்த பகுதியில் குடியிருந்தவர்களுக்கு உக்கடம் புல்காடு பகுதியில் தற்காலிக குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன.

படிக்க வேண்டும்

spot_img