நீலகிரி மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத் துறையின் சார்பில், உதகை படகு இல்லத்தில் உலக சுற்றுலா தின விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா சுற்றுலா பயணிகளுக்கான படகு போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தொடர்ந்து படகு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும், உலக சுற்றுலா தினத்தையொட்டி நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவியருக்கும் பரிசு களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் ஆட்சியர் பேசியதாவது,
சுற்றுலா வளர்ச்சிக்காக உலக சுற்றுலா அமைப்பு ஸ்பெயின் நாட்டில் மாட்ரிட் மாநகரில் 1970ம் ஆண்டு செப்டம்பர் 27ம் நாளை உலக சுற்றுலா தின மாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து இந்நாளை ஒவ்வோர் ஆண்டும் ஒரு கருப் பொருளுடன் உலக சுற்றுலா தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப் படுகிறது.
இவ்வாண்டில் சமூக வளர்ச்சிக்கு சுற்றுலா என்ற கருப்பொருளை மையமாக கொண்டு உலக சுற்றுலா தினம் கொண் டாடப் படுகிறது.
ஏற்கனவே உலக சுற்றுலா தினத்தையொட்டி, உதகை அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவியருக்கான கட் டுரைப்போட்டி, தூய்மையே சேவை என்ற கருப்பொருளை மையமாக கொண்டு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டுள்ளது.
படகு போட்டி, இசை நாற்காலி போட்டி உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவில் சுற்றுலா தலங்கள் உள்ளதால் வெளிநாடுகள், வெளி மாநிலத்தில் இருந்து தினந் தோறும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து சுற்றுலாத் தலங்களை கண்டுகளிக்கிறார்கள்.
தற்போது அரசால் பல்வேறு தளர்வுகள் அறி விக்கப்பட்டு சுற்றுலா தலங்கள் திறக்கப் பட் டுள்ளதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்துக்குள் வருகை தரும் போது கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும்.
சமூக இடைவெளியை பின்பற்றி அரசு தெரி வித்துள்ள நிலையான வழி காட்டு நெறி முறைகளை கடைபிடித்து சுற்றுலா தலங்களை கண்டுகளிக்க வேண் டும் என்றார்.
உலக சுற்றுலா தினத்தை யொட்டி தோடர், கோத்தர், படுகர் இன மக்களின் கலை நிகழ்ச்சிகளும் நடை பெற்றன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாசங்கர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் வெங்கடேசன், மாவட்ட சமூக நல அலுவலர் தேவகுமாரி, சுற்றுலா துறை மண்டல மேலாளர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



