fbpx
Homeபிற செய்திகள்கோவையில் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம்: ஆட்சியர்

கோவையில் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம்: ஆட்சியர்

கோவையில் 6 மாதம் முதல் 5 வயது வரையிலுள்ள குழந்தைகளுக்கு வைட்ட மின் ஏ திரவம் வழங்கும் சிறப்பு முகாம் செப்டம்பர் 27ம் தேதி தொடங்கி அக்டோபர் 4ம் தேதி வரை நடைபெறுவதாக ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கு வைட்டமின் ஏசத்து குறை பாட்டால் மாலைக்கண் நோய், வறண்ட விழித்திரை போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

இதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் வைட்டமின் ஏ சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்யும் வகை யில் 6 மாதம் முதல் 5 வயது வரையிலுள்ள குழந்தைகளுக்கு சுகாதாரத் துறை சார்பில் ஆண்டுக்கு 2 முறை வைட்டமின் ஏ திரவம் வழங்கப்படுகிறது.

அதன்படி கோவை மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நி¬ லயங்கள், துணை சுகா தார நிலையங்கள், அங்கன் வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் சிறப்பு முகாம் செப்டம்பர் 27ம் தேதி தொடங்கி அக்டோபர் 4ம் தேதி வரை நடை பெறுகிறது.

மாவட்டம் முழுவதும் 3 லட்சத்து 1,209 குழந்தை களுக்கு வைட்ட மின் ஏ திரவம் வழங்கத் திட் டமிட்டுள்ளது.

எனவே 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் சிறப்பு முகாமில் பங்கேற்று குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் பெற்று கொள் ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img