யூகோ வங்கி கோவை மண்டல அலுவலகத்தில் இந்தி வார விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி 14.09.2021 முதல் 20.09.2021 வரையில், பல்வேறு போட்டிகள், மண்டல அலுவலகத்திலும் மற்ற அனைத்து 60 கிளைகளிலும் நடத்தப்பட்டது.
நிறைவு நாளான இன்று சிறப்பு விருந்தினர் சி.பி.சுவாமிநாதனுக்கு, மண்டல மேலாளர் ஆர்.எஸ்.அஜித் “யூகோ- கல்கி கிருஷ்ணமூர்த்தி” விருதினை வழங்கி கௌரவித்தார். மேலும் போட்டிகளில் வெற்றி பெற்ற இதர அலுவலர்களுக்கும் பரிசினை வழங்கி பாராட்டினார்.
விழா நிறைவாக அனைவரும் உள்துறை அமைச்சக வழிகாட்டுதலின்படி, இந்தியை அலுவலக மொழியாக ஏற்றுக் கொள்வதற்கான உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர்.



