fbpx
Homeபிற செய்திகள்நஞ்சை புளியம்பட்டி உறைவிடப் பள்ளி மாணவிகளின் கைவினைப் பொருட்களுக்கு ஈரோடு ஆட்சியர் பாராட்டு

நஞ்சை புளியம்பட்டி உறைவிடப் பள்ளி மாணவிகளின் கைவினைப் பொருட்களுக்கு ஈரோடு ஆட்சியர் பாராட்டு

நஞ்சை புளியம்பட்டியில் அமைந்துள்ள கஸ்தூரிபா காந்தி பா லிகா வித்யாலய பெண்கள் உண்டு உறைவிடப்பள்ளி மாணவிகள் தயாரித்த கைவினைப் பொருட்களை பார்வையிட்டு, வெகுவாக பாராட்டினார் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டம், நஞ் சை புளியம்பட்டியில் அமைந்துள்ள நெல் கொள்முதல் நிலையம், நஞ்சை புளியம்பட்டியில் உள்ள கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலய பெண்கள் உண்டு உறை விடப் பள்ளி, நஞ்சை துறையம் பாளையத்தில் அமைந்துள்ள நியாய விலைக்கடை ஆகியவற் றினை மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி நேற்று (செப்.20) பார் வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நஞ்சை புளியம்பட்டி நேரடி நெல் கொள்முதல் நிலை யத்தினை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், ஈரோடு மாவட் டத்தில் அரசு சார்பில் 34 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகளிடம் இருந்து கடந்த 28.08.2021 முதல் நெல் கொள்முதல் செய்யப் பட்டு வருகிறது.

விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு கே.எம்.எஸ். 2020-2021 பருவத்தின்படி சன்னரகம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1958-ம், பொதுரகம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1918-ம் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரை விவசாயிகளிடம் இருந்து 110 டோக்கன் பதிவுகள் செய்யப்பட்டு, தற்போது வரை 71 விவசாயிகளின் நெல் கொள்முதல் செய் யப்பட்டுள்ளது. இருப்பில் 39 விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்ய வேண்டி உள்ளது.

அன்றைய தினம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட் டைகளை அன்றைய தினமே திறந்த வெளி நெல் சேமிப்பு கிடங்கிற்கு இயக்கம் செய்திட அலுவ லர்களுக்கு ஆட்சியர் அறி வுறுத்தினார்.

கோபிசெட்டிபாளையம் வட்டம், தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றியம், நஞ்சை புளியம் பட்டியில் அமைந்துள்ள கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலய பெண்கள் உண்டு உறைவிடப்பள்ளியினை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

அனைத்து வகுப்பறைகள், சமையலறையினையும், அங்கு குழந்தைகளுக்கு அளிக்கப்படும் உணவுகள் குறித்தும், குடிநீர் வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். மாணவியர்கள் தயாரித்த கைவினைப் பொருட்களை பார்வையிட்டு, வெகுவாக பாராட்டினார். கொரோனா காலகட்டத் தில் மாணவிகள் மிகுந்த பாதுகாப்புடனும், விழிப் புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று அறிவு றுத்தினார்.

வாணிப்புத்தூர் பேரூ ராட்சி அலுவலகத்தை ஆட்சியர்ஆய்வுசெய்தார். அலுவலக கோப்புகளை பார்வையிட்டார். கொரோனா வைரஸ் தடுப்பூசி தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள விழிப்புணர்வு விபரங்களை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

மழைக் காலங்களில் பொதுமக் களுக்கு தங்கு தடையின்றி அடிப்படை தேவைகளை நிறைவேற்றிட வேண்டும். சுகாதாரம், தூய்மைப் பணி யாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

அனைவரும் கட்டாயம் கொரோனா நோய்த் தொற்று தடுப்பூ சியினை போட்டுக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

புஞ்சை துறையம்பாளையம் பகுதிக்கு உட்பட்ட நஞ்சை துறையம் பாளையத்தில் அமைந்துள்ள நியாய விலைக் கடையை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

அரிசி, பருப்பு உள் ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் மற்றும் அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் பார்வையிட்டார்.

கொண்டையம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் ஆட் சியர் ஆய்வு செய்து, ஆவ ணங்களையும் மற்றும் அத் தாணி மெயின் ரோடு, கள்ளிப்பட்டி பகுதியில் அமைந்துள்ள கழனி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தினையும் ஆய்வு செய்தார்.

இந்நிறுவனத்தின் தற்போதைய செயல் பாடுகள் குறித்து கேட் டறிந்தார்.
வேளாண்மை, விற்பனை மற்றும் வணிகம், தோட்டக் கலைத்துறை உள்ளிட்ட அலுவலர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான அரசு திட்டங்கள் குறித்து ஆட்சியர் கூறினார்.

ஆய்வின் போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கொள் முதல் அலுவலர் நசீர், வாணிப்புத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் உட்பட பலர் உடன் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img