fbpx
Homeபிற செய்திகள்கோவையில் தூய்மை பணி முகாம் 1500 பணியாளர்கள் பங்கேற்பு

கோவையில் தூய்மை பணி முகாம் 1500 பணியாளர்கள் பங்கேற்பு

தமிழக அரசின் நக ராட்சி நிர்வாகம் மற் றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மாபெரும் தூய்மை பணி முகாமை மாவட்ட ஆட்சியர் சமீரன் இன்று (செப்.20) துவக்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் இன்று பல்வேறு மாவட் டங்களில் மாபெரும் தூய்மை பணி முகாம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று கோவையிலும் மாபெரும் தூய்மை பணிமுகாம் தொடங்கியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக ,கோவையில் 50 கி.மீ. சுற்றளவுக்கு மாநகராட்சியின் 81-வது வார்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய்களை தூய் மைப்படுத்தும் பணியை, மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபல் சுன்கரா ஆகியோர் துவக்கி¬ வத்தனர்..

இந்த தூய்மைப்பணி, இன்று முதல் ஐந்து நாட்களுக்கு, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட 1500 கி.மீ.சுற்றளவுக்கு மேற்கொள்ளப்படுகிறது.
இந்த பணியில் 1500 தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வார்டு வாரியாக இவர்கள் அடுத்த 5 நாட் களுக்கு பணியினை மேற் கொள்கின்றனர்.

முன்னதாக தூய்மை பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜ கோபால் சுன்கரா ஆகியோர் பாதுகாப்பு உபக ரணங்களை வழங்கினர்.

படிக்க வேண்டும்

spot_img