சேலம் மாநகர மாவட்ட இலக்கிய கூட் டமைப்பு சார்பில், யுனிக் ஐ.ஏ.எஸ். அகாடமியில், உயிர் மெய்த் தமிழ் சங்க மாநில தலைவர் சேலத்து பாரதி சொல்லரசர் பிறந்த தின விழாவும், அவரது இலக்கிய சேவையை பாராட்டி மைஸ்டாம்ப் அஞ்சல் தலை வெளியீட்டு விழாவும் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பணி நிறைவு வணிக வரி உதவி ஆணையரும், கவிஞரு மான பா.மா.ஆறுமுகம் தலைமை வகித்தார்.
யுனிக் ஐ.ஏ.எஸ்.அகாடமியின் தலைவர் ஜெ.கோவிந்தராஜ், தொ டக்க வேளாண்மை கூட் டுறவு வங்கி தலைவர் கடத்தூர் ஆ.பழனிசாமி, அன்னதான வள்ளல் சின்னு முதலியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஓ.எஸ்.கணேஷ் வர வேற்றார்.
நூலகர் சம்பத், அ.மு.மு.அனீப், திருவள்ளுவர் பெருமன்றத் தலைவர் காளி.தங்கதுரை, ஆன்மிக சொற்பொழிவா ளர் சேலம் சிட்டிபாபு, தமிழியக் கமாவட்ட செயலாளர் ஓடெக்ஸ். எம்.ஏ.இளங்கோவன், போதிமரம் முதியோர் இல்ல நிர்வாகிகள் ராஜேஸ்வரி, ரமேஷ் ஆகி யோர் வாழ்த்தி பேசினர்.
கவிஞர்கள் வி.எம்.ஆர்.ரவி, சி.ரவி, கா.ரமேஷ் ஆகியோர் கவிபாடினர். அன்னதான பட்டி சக்திவேல், மாதையன், சின்ன கொல்லப்பட்டி சுப் பிரமணி, பாலாஜி, ஷாம், மணிவேல், ராஜேந்திரன், ஜாலிமணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அன்னதான வள்ளல் சின்னு முதலிக்கு திருவள்ளுவர் விருதும், யுனிக் அகாடமி தலைவர் கோவிந்தராஜுக்கு அப்துல்கலாம் திருவுருவ சிலையும் வழங்கி சேலத்து பாரதி சொல்லரசர் ஏற்புரையாற்றினார்.
கோவை வசந்த வாசல் கவி மன்றம் சார்பில், தமிழ்க்கோ விருதும், சேலம் டி.ஜே.ஏ. அமைப் பால் சொற்கோ விரு தும் பெற்ற சொல்லரசரை அனைவரும் பாராட்டி பேசினர்.
சேலத்துபாரதி சொல்லரசர் உருவம் பொறித்த அஞ்சல் தலை யினை அனை வரும் இணைந்து வெளியிட, அதனை சேலத்து பாரதி சொல்லரசர் பெற்றுக் கொண்டார்.



