கோவை மாவட்டம் தடுப்பூசி செலுத்துவதில் முதலிடத்தில் உள்ளது” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், பிராணவாயு உற்பத்தி அலகு துவக்கி வைத்து சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன் ஆய்வு செய்தார். தொடர்ந்து மீனாட்சிபுரம் சோதனைச்சாவடியில் பாதுகாப்பு, கண்காணிப்பு பணிகளை ஆய்வு செய்தார்.
பின்னர், நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்ப டுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில், 56 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
தொடர்ந்து மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. கோவை மாவட்டத் தில், 29,27,149 பேர் தடுப்பூசி செலுத்த தகுதியானவர்களாக உள்ளனர்.
அதில், 22,04,631 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
இதில், இரண்டாவது தவணை தடுப்பூசி, 7,18,335 பேருக்கு செலுத்தப்பட்டது.
கோவையில், 75 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில், கோவை மாவட்டம் தடுப்பூசி செலுத்தியதில் முதலிடம் வகிக்கிறது.”
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.



