உலக அளவில் மருந்து ஆராய்ச்சி மற்றும் மருந்து விற்பனையில் முன்னணி நிறுவனமாக திகழும் க்ளென்மார்க் பார்மாசூட்டி கல்ஸ் நிறுவனம், இந் தியாவில் கொரோனா நோயாளிகளுக்கான பவிபிரவீர் (பேபிப்ளூ) மாத்திரை விற்பனையை துவங்கிய பின் நடத்திய ஆய்வில், இதுª பரிய அள விலான பக்க விளைகளை ஏற்படுத்தவில்லை மற்றும் பாதுகாப்பானது என்று தெரிய வந்திருக்கிறது.
மாத்திரை சந்தைப்படுத்தலுக்கு பிந்தைய ஆய்வை லேசான மற்றும் மிதமான கொரோனா பாதித்த நோயாளிகளிடம் இந் நிறுவனம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் துவக்கியது.
1083 நோயாளிகளிடம் ஆய்வு நடத்தப்பட்டது. நோயாளிகளின் சராசரி வயது 40.
மும்பை, பெங்களூர், ஐதராபாத், நாசிக், நாக்பூர் திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களில் 30 இடங்களில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆய்வு நடந்தது.
இதுகுறித்து இந்தியா பார்முலேஷன்ஸ் குழும துணைத்தலைவர் அலோக் மாலிக் கூறியதாவது: நிஜ உலக அமைப்புகளில் இந்தமாத்திரையின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை ஆய்வு செய்ததில் இந்த ஆய்வு மிகவும் முக்கியமானது.
இருப்பினும், லேசான மற் றும் மிதமான கோவிட் -19 பாதித்த நோயாளிகளுக்கு இந்த மருந்து சிறப்பான செயல்திறனை நிரூபித் துள்ளது ஆய்வில் தெரி யவந்திருக்கிறது.
இது க்ளென்மார்க் மற்றும் மருத்துவ சமூகத்திற்கு ஒருபடி முன்னோக்கிய நிலையாகும். ஏனெனில், வாய்மூலமாக எடுத்துக் கொள்ளும் மருந்தானது தொற்று நோயைக் கையாள்வதில் பல நன்மைகளை வலுப்படுத்துகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை இதற்கான தடையை நீக்கி அவசரகாலத்திற்கு பயன்படுத்துவதற்கான ஒப்புதலை கடந்த ஆண்டு ஜூன் 19-ம் தேதி இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து பெற்ற முதல் நிறுவனம் க்ளென்மார்க்.
லேசானது முதல் மிதமான கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு வாய் மூலமாக எடுத்துக் கொள்ள இந்தியாவில் அங்கீகரிக்கப் பட்ட முதல் மருந்து பவிபிரவீர் ஆகும்.
கோவிட் -19 பரவல் அவசர நிலையைக் கருத்தில் கொண்டு, விரைவான ஒப்புதல் செயல்முறையின் ஒரு பகுதியாக இந்த அனுமதி வழங்கப்பட்டது என்றார்.



