fbpx
Homeபிற செய்திகள்இருவார கால தீவிர வயிற்றுப்போக்கு தடுப்புமுகாம் மாவட்டத்தில் 3,37,107 குழந்தைகள் பயன்பெறுவர் கோவை ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன்...

இருவார கால தீவிர வயிற்றுப்போக்கு தடுப்புமுகாம் மாவட்டத்தில் 3,37,107 குழந்தைகள் பயன்பெறுவர் கோவை ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தகவல்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று (செப்.16) மருத்துவம் -மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில், இருவார கால தீவிர வயிற்றுப் போக்கு தடுப்பு முகாமை மாவட்ட ஆட்சியர்டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தொடங்கி வைத்து, ளிஸிஷி மற்றும் ஜிங்க் மாத்திரைகளை குழந்தைகளுக்கு வழங்கினார்.

இத்திட்டத்தில் மாவட்டத்தில் ஐந்து வயதுடைய குழந்தைகள் 3,37,107 பேர் பயன் அடைவார்கள் என்று அவர் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர்மேலும்கூறியதாவது:

இந்தியாவில் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பில் 10% வயிற்றுப் போக்கினால் ஏற்படுகிறது. நிமோனியாவுக்கு அடுத்தபடியாக இது ஒரு பொது சுகாதார பிரச்சனை ஆகும். நம் நாட்டில் ஆண்டிற்கு சுமார் 1 இலட்சம் குழந்தைகள் வயிற்றுப் போக்கினால் இறந்து போகிறார்கள்.

இதனை கருத்தில்கொண்டு,தமிழகஅரசு ‘இருவார கால தீவிர வயிற்றுப் போக்கு தடுப்பு முகாம்’நடத்தஆணையிட்டுள்ளது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கமானது ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் வயிற்றுப் போக்கினால் ஏற்படும் உயிரிழப்பை முற்றிலும் தவிர்க்க முடியும்.

இத்திட்டமானது, கோவை மாவட்டத்தில் செப். 16 முதல், அங்கன்வாடி மையங்கள் ,துணை சுகாதார நிலையங்கள், அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நடைபெறும்.

பொது சுகாதாரத்துறை பள்ளிகல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட அனைத்து துறைகளை சார்ந்த களப் பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் இம்முகாமில் ஈடுபட்டுள்ளார்கள்.

முகாமில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர் நலவியல் மற்றும் சுகாதார முக்கியத்துவத்தை அனைத்து குடும்பங்களுக்கும் பயிற்றுவிக்க வேண்டும். ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு ஒரு ஓ.ஆர்.எஸ். பொட்டலம், ஒரு குழந்தை வீதம் விநியோகிக்க வேண்டும்.

வயிற்றுப்போக்கு உள்ள குழந்தைகளை கண்டுபிடித்து ளிஸிஷி மற்றும் ஜிங்க் மாத்திரை அளித்து அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிந்துரை செய்து சிகிச்சை மேற்கொள்ளச்செய்யவேண்டும்.

இத்திட்டத்தின் மூலம் கோவை மாவட்டத்தில் 3,37,107 ஐந்து வயதுடைய குழந்தைகள் பயனடைவார்கள்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தார்.
முகாமில், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, துணை இயக்குநர் (சுகாதாரம் மற்றும் ஊரக நலப்பணிகள்) மரு.அருணா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img