உலகின் முன்னணி நகைக் கடை குழுமங்களில் ஒன்றான மலபார் கோல்ட் அன்ட் டைமண்ட்ஸ், தெலுங்கானாவில் உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ரூ.750 கோடி முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.
தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கே.டி.ரா மாராவ், மலபார் குழு மத்தின் தலைவர் எம்.பி. அஹமத் ஆகியோர் இடை யே ஹைதராபாத்தில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
மலபாரின் புதிய தொழிற்சாலை ஹைதராபாத்தில் உள்ள தொழிற்பூங்காவில் தொடங்கப்படும். இந்த திட்டத்திற்கான அனைத்து உள்கட்டமைப்பு வசதி களையும் அமைச்சர் கே.டி. ராமாராவ் வழங்கினார்.
மலபாருக்கு புதிய தொழிற் சாலைக்காக 3.7 ஏக்கர் நிலம் தேவை. இந்த திட்டம் முடிந்தவுடன் குறைந்தது 2500 வேலை களை உருவாக்கும். தெலுங் கானாவில் மலபார் தனது 15 சில்லறை விற் பனை ஷோரூம்களில் 1000 பேரை வேலைக்கு அமர்த்தி உள்ளது.
தனது சில்லறை வர்த்தகத்தை தெலுங்கானாவில் விரிவாக் கவும் மலபார் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
குழுவின் தலைவர் எம்.பி.அஹமத் பேசியதா வது: முன்மொழியப்பட்ட முதலீடு தெலுங்கானாவில் உள்நாட்டு சந்தை மற்றும் ஏற்றுமதியை இலக்காகக் கொண்டது.
மலபார் குழுமத்திற்கு இப்போது 10 நாடுகளில் 260 கடைகள் உள்ளன.
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பல்வேறு மாநிலங்களில் நிறுவனத்திற்கு 13 உற்பத்தி பிரிவுகள் உள்ளன.
பொதுவாக தெலுங்கானா அரசின் ஆதரவு குறிப்பாக தொழில் துறை அமைச்சர் கே.டி.ராமா ராவின் ஆதரவு, மாநிலத் தில் அதிக முதலீடு செய்யத் தூண்டியது.
அனைத்து முக்கிய முடிவுகளையும் ஒரே கூட்டத்தில் எடுத்து முதலீட்டை எளிதாக்குவ தற்கு, துறைத் தலைவர் களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கிய தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம் அமைச்சரை வாழ்த்த வேண்டும்.
அரசு மிகவும் சுறுசுறுப்பாக முடிவுகள் எடுப்பதில் விரைவாக வும் உள்ளது. இது முன்னேற்றத்திற்கான முயற்சி. நாங்கள் முழு நம்பிக்கையுடன் மாநிலத் தில் முதலீடு செய்கிறோம் என்றார் அஹமது.
மலபார் குழுமம் எம்.டி. (இந்தியா ஆபரேஷன்ஸ்) ஓ ஆஷர், துணைத் தலைவர் கே.பி.அப்துல்சலாம், தலைமை நிதி அதிகாரி எஸ்.ராமகிருஷ்ணன், சில்லறை விற்பனைத் தலைவர் (இந்தியாவின் மற்ற பகுதிகள்) பி.கே.சிராஜ் ஆகியோர் மலபார் குழுமத்தில் இருந்து கூட் டத்தில் பங்கேற்றனர்.
தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பம் முதன்மை செயலா ளர் ஜெயேஷ் ரஞ்சன், தொழில்துறை மற்றும் தொழில்நுட்பத் துறையின் மூத்த அதிகாரிகள் தெலுங் கானா அரசு சார்பில் கூட் டத்தில் பங்கேற்றனர்.



