fbpx
Homeபிற செய்திகள்கே.கே.புதூரில் திமுக சார்பில் சமுதாய வளைகாப்பு

கே.கே.புதூரில் திமுக சார்பில் சமுதாய வளைகாப்பு

கோவை சாய்பாபா காலனியை அடுத்த கேகேபுதூர் பகுதியில், திமுக சார்பில், சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடை பெற்றது. முதல்வர் மு.க.ஸ்டா லின் ஆணைக்கிணங்க, இந்நிகழ்ச்சி நடந்தது. இதில் 70 கர்ப்பிணிகள் பங்கேற்றனர்.

பகுதி பொறுப்பாளரும் 11-வது வட்டத்தின் முன்னாள் மாமன்ற உறுப் பினருமான கே.எம்.ரவி தலைமை தாங்கினார். வேலாண்டிபாளையம் பகுதி பொறுப்பாளர் கிருஷ் ணராஜூ முன்னிலை வகித்தார்.

மஞ்சள், குங்குமம், பூ, பழம், இனிப்புகள், ஐந்து வகையான உணவுகளோடு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா கிருஷ்ணன், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் சுக்ருல்லா பாபு, 11-வது வட்ட பொறுப்பாளர் கண்ணண், 45-வது வட்ட செயலாளர் பாபு, 44-வது வட்ட பெறுப்பாளர் குட்டி(எ)ஜெயசந்திரன், பல்சமய நல்லுறவு அறக்கட்டளை முஹம்மது ரபிக், திமுக பகுதி பொறுப்பு குழு சங்கனூர் ரங்கசாமி, பூ பால், ரமணன், மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img