கன்னியாகுமரி மாவட்டத் தில், தமிழ்நாடு மகளிர் நலமேம்பாட்டு நிறுவனம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ், எள்ளுவிளை, காட்டாத்துறை மற்றும் பேச் சிப்பாறை ஊராட்சிகளில், சுய உதவிக்குழுக்கள் வாயிலாக தயாரிக்கப்படும், உற்பத்தி பொருட்களை செய்தியாளர் பயணத்தின் போது, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.அரவிந்த் நேரில் கள ஆய்வு மேற்கொண்டு, அவற்றை மேம்படுத்த சம்பந்தப் பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர் களிடம் தெரிவித்ததாவது:-
தமிழக அரசு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் மகளிர் முன்னேற்றத்திற்கான செயல்பாடு களை செயல்படுத்தி வருகிறது.
பெண்களை பொருளாதார சுய சார்பு அடையசெய்வதோடு மட்டுமல்லாமல் சமுதாய முன்னேற்றத்திற்கான மக்கள் அமைப்புகளை உருவாக்கி பல்வேறு நலதிட்டங்களை செயல்படுத்திவருகிறது.
மாண் புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள், 2021-2022 திருத்திய நிதிநிலை அறிக்கையில், மகளிர் சுயஉதவிகுழுக்களுக்கு ரூ.2756 கோடி கடன் தள்ளுபடி செய் யப்படும் என சட்டப் பேரவையில் அறிவித்துள்ளார்.
மேலும், மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு தமிழக அரசு மகளிர் திட்டம், மாவட்ட தொழில்மையம், முன் னோடி வங்கிகள்வாயிலாக சுயதொழில் தொடங்குவதற்கு பல்வேறு கடனுதவிகள் வழங் கப்பட்டு வருகிறது.
அதனடிப் படையில், கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எள்ளுவிளை ஊராட்சி பகுதி யில், முல்லை மகளிர் சுய உதவிக்குழு வாயிலாகமேற் கொள்ளப்பட்டு வரும் காளான் வளர்ப்பு அலகினை பார்வையிட்டு, காளான் வளர்ப்பு வழிமுறைகள் குறித்து கேட்டறியப்பட்டது.
மேலும், வேலைவாய்ப்பற்ற படித்த இளை ஞர்கள், இளம்பெண்கள் மற்றும் பொது மக்களுக்கு இலாபத்தை ஈட்டும், காளான் வளர்ப்பு குறித்து, பயிற்சி அளித்து, அவர்களும் சுயதொழில் தொடங்குவதற்கு உரியநடவடிக்கை மேற்கொண்டு தங்களது குழுவிற்கு லாபத்தை ஈட்டி, குழுஉறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அறிவுரை வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, திருவட்டார் ஊராட்சி ஒன்றியத் திற்குட்பட்ட, காட்டாத்துறை ஊராட்சி பகுதியில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் மூலம் வாழை நாரில் தயா ரிக்கப்படும் பல்வேறு கைவினைப் பொருட்களை பார்வையிட்டு, வாழை நாரைபதப்படுத்தி, கைவி னைப்பொருட்கள் தயாரிக்கும் முறைகளை கேட்டறிந்து, சுய உதவிக்குழுக்களால் தயாரிக்கப்படும் வாழை நார் பொருட்களை சந்தைப்படுத்துவது குறித்து, ஆலோசனைகளை குழுவின ருக்கு வழங்கியதோடு, அப் பொருட்களை இணையவழி சந்தைப்படுத்ததுறை அலுவ லர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, பேச்சிப்பாறை ஊராட்சி, சமத் துவபுரத்திலுள்ள ஐஸ்வரியர் மகளிர் சுயஉதவிக்குழு தைய லகத்தில், தயாரிக்கப்படும் ஆடைகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, இலாப நோக்கில் சந்தைப்படுத்திட ஆடைகளை புதுமையான வகையில் வடிவமைத்திட தையல் கலைஞர்களுக்கு அறிவுறுத்தப் பட்டது.
அதனைத்தொடர்ந்து, ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு வாயிலாக நடை பெற்ற கண்காட்சியில் வைக்கப் பட்டுள்ள நல்லமிளகு, சீரகம், பட்டை, கிராம்பு உள்ளிட்ட நறுமணப்பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனை செய் யப்படுவதை குறித்து கேட்டறியப்பட்டது.
மேலும், அக்குழுவினர்களுடன் கலந்துரையாடி, சமுதாய முதலீட்டு நிதியிலிருந்து 9 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தொழில் தொடங்குவதற்கு ரூ.8.50 இலட்சம் கடனுதவிகள் வழங்கப்பட்டது.
தமிழக அரசின் சார்பில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் அனைத்து நலத் திட்டங்களும் உடனுக்குடன் கிடைத்திட அனைத்து அலுவலர்களும் ஒன்றுப்பட்டு செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு, தமிழக அரசால் வழங்கப்படும் கடனுதவிகளை மகளிர் சுயஉதவிக்குழுவினர்கள் பெற்று, வாழ்வில் ஏற்றம் பெறவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் மா.அரவிந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். செய்தியாளர் பயணத்தின் போது, திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) மைக்கேல் அந்தோனி பெர்னான்டோ, அனைத்து மகளிர் திட்ட உதவிதிட்ட அலுவலர்கள், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கமேலாளர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் வட்டார இயக்க மேலாண்மை அலகு பணியாளர்கள்ஆகியோர் கலந்து கொண்டனர்.



