பொள்ளாச்சியில் உள்ள நீர்வளத் துறையின் தலைமைப் பொறியாளர் அலுவலக வளாகத்திற்கு மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ‘சி.சுப்பிரமணியம் வளாகம்’ என்று பெயர் சூட்டப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்த முதல்வர் மு.க.ஸ் டாலினுக்கு கோயம்புத்தூர் விவச £ய சங்க பிரதிநிதிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டம் உருவாக முக்கியக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர் வி.கே.பழனிசாமி கவுண்டர். இவருக்கு, ஆழியாறு அணை பூங்காவில் நினைவு மண்டபம் மற்றும் மார்பளவுச் சிலை அமைக்கும் பணிகள் ரூ. ஒரு கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.
இதனை, பி.ஏ.பி. திட்டப் பணிகள் நடைபெற்றபோது ஏற்பட்ட விபத்தில் உயிர் நீத்தவர்களுக்கான நினைவு மண்டபமாக மாற்றி அமைக்கப்படும்.பொள்ளாச்சியில் உள்ள நீர்வளத்துறையின் தலை மைப் பொறியாளர் அலுவலக வளாகத்திற்கு மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ‘சி.சுப்பிரமணியம் வளாகம்’ என்று பெயர் சூட்டப்படும்.
இவ்வளாகத்தில் விவசாயப் பெருமக்களுக்குப் பயிற்சிகள் மற்றும் கருத்தரங்கம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்திட ஏதுவாக ரூ.4 கோடி மதிப்பீட்டில் இரண்டு அடுக்குகள் கொண்ட புதிய அரங்கு கட்டமைக்கப் படும். இவ்வரங்கத்திற்கு ‘வி.கே.பழனிசாமி அரங்கம்’ எனப் பெயர் சூட்டப்படும்.
மேல்தளத்தில் அமை க்கப்படும் அரங்கத்திற்கு ‘பொள்ளாச்சி நா.மகாலிங்கம்’ பெயர் சூட்டப்படும். இம்மண்டபத்தில் பரம்பிக்குளம் ஆழியாறுத் திட்டப்பணிகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்படும்.
இவ்வளாகத்தில் வி.கே.பழனிசாமி கவுண்டர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் சி.சுப்பிரமணியம், தொ ழிலதிபர் பொள்ளாச்சி நா.மகா லிங்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரைப் பெருமைப்படுத்துகிற வகையில் அன்னார்களது முழு திருவுருவச் சிலைகள் அமைக்க ரூ.30 இலட்சம் என ஆக மொத்தம் ரூ. நான்கு கோடியே முப்பது இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
இன்றைய இளைய தலைமுறையினர் நீர்மேலாண்மை யின் முக்கியத் துவத்தை உணரும் பொருட்டு, பரம்பிக்குளம் ஆழியாறு பாச னத் திட்டத்தை அன்றைய பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு துவக்கி வைத்த நாளான 07.10.1961-ம் நாளை, பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்ட தினம் என அறிவித்து, ஆண்டு தோறும், இந்நாளில் அன்னார்களின் திருவுருவச் சிலைகளுக்கு அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என்ற சட்டப்பேரவையில் முதல்வர் அறி வித்துள்ளார்.
வி.கே.பழனிசாமி கவுண்டர்
விவசாயிகளின் கோரிக்கைகளை அரசிடம் கொண்டு சேர்த்து அவர்களுக்கான திட்டங்களை பெற்று தருவதற்கு அரும்பாடுபட்டவர்கள் பலர். அதிலும் நமது கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு பரம்பிக்குளம் ஆழியாறு அணைத் திட்டத்திற்கு பாடுபட்டவர்தான் வி.கே.பழனிசாமி கவுண்டர்.
சட்டமன்றத்தில் இவர் பரம்பிக்குளம் திட்டம் பற்றிய கோரிக்கையை வைத்தார். அன்றைய தமிழக முதல்வர் காமராஜர், பொதுப்பணித் துறையிடம் பரம்பிக்குளம் ஆழியாறு அணை திட்டம் குறித்து ஆராயுமாறு உத்தரவிட்டார்.
தென்கொங்கு நாட்டின் வறண்ட நிலங்களை எல்லாம் வளமான பூமியாக மாற்றிய பெருமை இத்திட்டத்துக்கு உண்டு. இத்திட்டத்திற்கு அடித்தளமாக இருந்தவர் வி.கே.பழனிசாமி கவுண்டர்.
மழையின்றி வளம்குன்றி இருந்த பகுதிகளெல்லாம் இத்திட்டத்தின் வரவால் பாசன வசதி பெற்றன. உணவு உற்பத்தி பெருகியது. விவசாயிகளின் நிலை உயர்ந்தது. பொதுநல நோக்குடன் செயல்பட்ட வி.கே.பழனிச்சாமி கவுண்டர் கனவு தொடர்ந்து பல்லாண்டு முயற்சிகளுக்குப் பிறகு நிறைவேறியது.
அதனைத் தொடர்ந்து இத்திட்டம் நிறைவேற்றப்பட்டு இப்பகுதிகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் இன்று பாசனப் பயன் பெற்று வருகின்றன.
சி.சுப்பிரமணியம்
தமிழ்நாட்டையும் இந்தியா வையும் வளப்படுத்தியதிலும் வலிமைப்படுத்தியதிலும் முக்கியப் பங்கு வகித்தவர் சி.எஸ். என்று அழைக்கப்படும் சி.சுப்பிரமணியம். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். அரசமைப்புச் சட்டத்தை வகுத்த அரசமைப் புச் சட்ட நிர்ணய சபையிலும் உறுப்பினராக இருந்தார்.
1952 முதல் 1962 வரையில் அப்போதைய சென்னை மாகாண அரசில் கல்வி, சட்டம், நிதி ஆகிய துறைகளின் அமைச்சராகச் சிறப்பாகப் பணியாற்றினார். உருக்கு, சுரங்கத் துறை அமைச்சராகவும், மகாராஷ்டிர மாநில ஆளுநராகவும் பணிபுரிந்து சேவையாற்றி உள்ளார்.
பின்னர், வேளாண் துறை அமைச்சராகவும் சிறப்பாகப் பணியாற்றினார். கோதுமை, அரிசி உற்பத்தியில் தன்னிறைவு பெற பசுமைப் புரட்சி கண்டார். பால் பெருக்கு திட்டங்களிலும் தனிக் கவனம் செலுத்தி வெண்மைப் புரட்சியையும் உண்டாக்கினார்.
பொள்ளாச்சி நா.மகாலிங்கம்
பிரபல தொழிலதிபர் சமூக சேவகரான பொள்ளாச்சி நா.மகாலிங்கம் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தார். சி.சுப்பிரமணியம் இவரது அரசியல் வழிகாட்டி. 1952,1957, 1962-ல் பொள்ளாச்சி தொகுதி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தொகுதி வளர்ச்சிக்காக பல திட்டங்களை செயல்படுத்தினார். பரம்பிக் குளம் ஆழியாறு திட்டம் செயல் படுத்தப் படுவதில் முக்கியப் பங்க £ற்றினார்.
தன் வாழ்நாள் முழுவதும் சமூகப் பணியில் அர்ப்பணித்து கொண்டார்.
இவரது சமூக சேவையைப் பாராட்டி அண்ணா, பாரதியார், காஞ்சி சங்கராச்சாரியார் பல்கலைக்கழகங்கள் கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கின. பத்மபூஷண், இந்திரா காந்தி ஒருமைப்பாட்டு விருது, மொரீஷியஸ் அரசு விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
இதயப் பூர்வமாக வரவேற்பு
பரம்பிக்குளம் – ஆழியாறு பாசனத் திட்டம் திருமூர்த்தி நீர்த்தேக்கத் திட்டக்குழுவின் தலைவர் மெடிக்கல் கே.பரமசிவம் தெரிவித்ததாவது:
பொள்ளாச்சியில் செயல்படும் நீர்வளத் துறையின் தலைமை அலுவலக வளாகத்திற்கு, மறைந்த முன்னாள் அமைச்சரும், கேரளா மாநிலத்திற்கும் தமிழகத்திற்கும், அன்றைய கேரளா முதல்வராக இருந்த நம்பூதிரியார், தமிழக முதல்வராக இருந்த பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரால் ஏற்படுத்தப்பட்ட பி.ஏ.பி. ஒப்பந்தம் நிறைவேற்றப்படாமலேயே போய்விடுமோ என்கிற நிலை நிலவியது.
அப்போது, அன்றைய கேரளா முதல்வர் பட்டம் தானுப்பிள்ளையை புதுடெல்லியில் தனியாக சந்தித்து மத்திய அரசின் தலையீடு இல்லாமலேயே ஒப்புதலைப் பெற்றுத் தந்தவர் சி.சுப்பிரமணியம். அவரது நினைவை போற்றும் வகையில் சி.சுப்பிரமணியம் வளாகம் என பெயர் சூட்டப்படுகிறது.
இவ்வளாகத்திலேயே இந்த திட்டம் நிறைவேறுவதற்கு உறுதுணையாக இருந்த தலைவர்களுக்கு முழுஉருவ சிலைகள் வைக்கப்படுகின்றன. இந்த வளாகத்தில் ரூ.4 கோடி செலவில் இரண்டு அடுக்குகள் கொண்ட அரங்கம் அமைக்கப்படுகிறது.
அந்த அரங்கத்திற்கு பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தின் பிதா மகனும் இத்திட்டம் நிறைவேற கால தாமதம் ஆன நிலையில் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை உதறி எறிந்து விட்டு ஊர் திரும்பிய உத்தம மனிதன் வி.கே.பி. என்றுழைக்கப்படும் வி.கே.பழனிச்சாமி அரங்கம் என பெயர் சூட்டப்படுகிறது.
மேல் தளத்தில் அமைக்கப்படும் அரங்கத்திற்கு பி.ஏ.பி திட்டத்தை செயல்படுத்தும்படி அன்றைய முதல்வர் பெருந்தலைவர் காமரா ஜரை அடிக்கடி சந்தித்தும், இந்த திட்டம் குறித்து சட்டமன்றத்தில் ஆணித்தரமாக பேசியவரும், வி.கே.பி.க்கு உறுதுணையாக இருந் தவருமான அருட்செல்வர் என்று அனைவராலும் போற்றப்படும் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் பெயர் சூட்டப்படுகிறது.
முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு 07.10.1961 அன்று துவங்கப்பட்ட பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்ட நாளை பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத் திட்ட தினம் என்று அறிவிக்கப்படுகிறது.
மேற்கண்ட வளாகத்தில் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு அரசு சார்பில் மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.
சட்டப்பேரவையில் அறிவிக் கப்பட்ட இந்த அறிவிப்புகளை இதயப் பூர்வமாக வரவேற்கிறோம்.
அறிவிப்புகளை சட்டப்பேரவையில் வெளியிட ஒப்புதல் அளித்த முதல்வருக்கும், நீர்வளத்துறை அமைச்சருக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க மேற்கண்ட அறிவிப்புகளை வெளியிட்டு பி.ஏ.பி. விவசாயிகளின் இதயங்களில் நீங்கா இடம் பெற்றுள்ள செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோருக்கு பரம்பிக்குளம், ஆழியாறு பாசனத் திட்டம், திருமூர்த்தி நீர்த்தேக்கத்தால் பயன்பெறும் 3,77,164 ஏக்கர் பாசன விவசாயிகளின் சார்பாக என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்கி கொள்கிறேன்.
பொள்ளாச்சி மக்கள் நன்றி
கோவை தெற்கு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி செயலாளரும் விவசாயியுமான நித்தியானந்தம் தெரிவித்ததாவது:
பொள்ளாச்சி நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அலுவலக வளாகத்துக்கு மறைந்த முன்னாள் ஒன்றிய அமைச்சரும், இந்தியாவின் உணவு தன்னிறைவு க்கு வித்திட்டவருமான சி.சுப்பி ரமணியத்தின் பெயரை சூட்டி சிலை வைக்கவும், பிஏபி திட்டத்தின் தந்தை என போற்றப்படும் வி.கே.பழனிசாமி மற்றும் ஆழியாறு அணை கட்ட காரணமாயிருந்தவரும் நமது பகுதியின் முன்னேற்றத்திற்கு காரணமாகவும் இருந்த நா.மகாலிங்கம் ஆகியோரது திருவு ருவச்சிலையை அமைக்க உத்த ரவிட்ட முதல்வருக்கு பொள்ளாச்சி பகுதி மக்களின் சார்பிலும், விவசாயிகள் சார்பிலும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
பல்வேறு நல்ல திட்டத்தை கொண்டுவந்து சிறப்பாக பணியாற்றி தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினை வாழ்த்துகிறோம். தமிழ்நாடு விவசாயி சங்க கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி தெரிவித்ததாவது:
கொங்கு பகுதிகளை சேர்ந்த இவர்கள் இப்பகுதிகளின் விவசாய வளர்ச்சிக்கும் மக்களுக்காகவும் அரும்பாடுபட்டவர்கள்.
பொள்ளாச்சியில் உள்ள நீர்வளத்துறையின் தலைமைப் பொறியாளர் அலுவலக வளாகத் திற்கு மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணியம் வளாகம் என்றும் இவ்வளாகத்தில் விவசாயப் பெருமக்களுக்குப் பயிற்சிகள் மற்றும் கருத்தரங்கம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்திட ஏதுவாக ரூ.4 கோடி மதிப்பீட்டில் இரண்டு அடுக்குகள் கொண்ட புதிய அரங்கு, இவ்வரங்கத்திற்கு வி.கே.பழனிசாமி அரங்கம், மேல்தளத்தில் அமைக்கப்படும் அரங்கத்திற்கு பொள்ளாச்சி நா.மகாலிங்கம் என்றும் பெயர் சூட்டப்படவுள்ளது.
இவர்களுக்கு முழுவுருவ சிலை அமைப்பது மிகவும் வரவேற் கத்தக்கது. முதல்வரின் அறிவிப்பு பொருத்தமாக உள்ளது. இதற்கு விவசாயிகள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வெளியீடு:
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
கோயம்புத்தூர்.



