காலையில் யோகா பயிற்சி, பிராணாயாமம், லிங்க முத்திரை, இருவேளை கபசுர குடிநீர் என்பது போன்ற அறிவுறுத்தல்களினால், சித்தா சிகிச்சை மையத்தில், கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்றவர்கள், பூரண நலம் பெற்று வீடு திரும்பினர்.
அவர்கள் அனைவருக்கும் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க மருந்துகள் அடங்கிய ஆரோக்கிய பெட்டகம் வழங்கப்பட்டது என கன்னியா குமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தெரிவித்தார்.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின், பொறுப் பேற்றவு டன், கொரோனா இரண்டாவது அலையினை தடுக்கும் விதமாக, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு சிறப்பாக செயல்பட்டு, கொரோனா நோய் தொற்றினை கட்டுக்குள் கொண்டு வந்தார். தற்போது, மூன்றாம் அலையினை எதிர்கொள்வதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.
“வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்”
என்ற வள்ளுவரின் வாக்குறுதிற்கு இணங்க கோவிட் 19 விழிப்புணர்வு பிரச்சாரத்தினை, நோய் வருமுன் காப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 31.07.2021 அன்று தொடங்கி வைத்தார்.
குறிப்பாக, சித்தா மருத்துவ த்தின் மூலம் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் பாதுகாத்து கொள்வதற்கான வழிமுறைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, தமிழகத்தின் அனைத்து கிராமம் மற்றும் நகர்புற பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்த ஆணையிட்டுள்ளார்.
மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தெரிவித்ததாவது:
கன்னியாகுமரி மாவட்டத்தில் சித்தா கொரோனா சிகிச்சை மையம் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, இரண்டாம் அலையின் தொடக்கத்திலேயே ஸ்காட் கிறிஸ்துவ கல்லூரி வளாகத்தில் 240 படுக்கைகள் கொண்ட மையத்தில், சித்த மருத்துவ சிகிச்சைக்கான 50 படுக்கைகள் வழங்கப்பட்டு செயல்பட தொடங்கியது.
மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தெரிவித்ததாவது:
கன்னியாகுமரி மாவட்டத்தில் சித்தா கொரோனா சிகிச்சை மையம் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, இரண்டாம் அலையின் தொடக்கத்திலேயே ஸ்காட் கிறிஸ்துவ கல்லூரி வளாகத்தில் 240 படுக்கைகள் கொண்ட மையத்தில், சித்த மருத்துவ சிகிச்சைக்கான 50 படுக்கைகள் வழங்கப்பட்டு செயல்பட தொடங்கியது.
என்னென்ன மருந்துகள்
இச்சிகிச்சை மையத்தில் நோயாளிகளின் உடல் வலியை போக்கும் வகையில், அவர்களது உடலை தேற்ற அமுக்குரா மாத்திரையும், கபத்தை (சளி) குறைத்து வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் தீர்க்க அதிமதுர மாத்திரை, தொண்டை வலி மற்றும் தொண்டை கரகரப்பு நீக்குவதோடு கபத்தை இளக்கி வெளியேற்ற ஆடாதோடை, மணப்பாகு இருமலுடன் கூடிய காய்ச்சலுக்கு வசந்த குசுமாகர மாத்திரை, பிரமானந்த மாத்திரை ஆகிய உள் மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கபசுர குடிநீர் காலையும், மாலையும் என இருமுறை உட்கொள்ளும்போது நமது உடலில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கவும், நுரையீரலை தேற்றவும் வழிவகை செய்தது. வெளி மருத்துவ சிகிச்சையில், கை, கால் வலி தலைவலிக்கு பெயின்பாம், தலைபாரம், தலை நீரேற்றம் குறைய மஞ்சள் திரிபுகை மற்றும் தலை உச்சியில் வைக்க ராஸ்னாதி சூரணம் மற்றும் நொச்சி இலை, மஞ்சள் இவற்றை கொண்டு நீராவி சிகிச்சை வழங்கப்பட்டது.
சுவை, மணம் குறைவு ஏற்பட்டவர்களுக்கு முக கவசத்திற்குள் இட்டு கொள்ள ஓமபொட்டணம் வழங்கப்பட்டது.
அனைவருக்கும் சுவாசப் பாதை சீராக்கி மூச்சு விடுவதில் சிரமம் நீக்குவதிலும் ஓமபொட்டணம் சிறப்பாக பயன்பட்டது.
அஜீரணத்தை தடுக்க
மதியம் உணவு அருந்திய பின் நோயாளிகளுக்கு கிராம்பு, ஓமம், பனங்கற்கண்டு மற்றும் தாளிசாதி வடக மாத்திரை வைக்கப்பட்ட தாம்பூலம் வழங்கப்பட்டது.
இது கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளான நோயாளிகளுக்கு அஜீரணம் போன்ற ஜீரண மண்டல உபாதைகளும், நுரையீரல் பாதிப்பு அதிகரிக்காமலும் பாதுகாக்கிறது.
இவற்றோடு நோயாளிகளுக்கு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த யோகா பயிற்சி காலை நேரத்தில் வழங்கப்பட்டது. நுரையீரலை பலப்படுத்தி மூச்சு விடுவதில் சிரமம் குறைக்க திருமூலர் பிராணாயாமம், மன அழுத்தம் நீங்க யோக முத்திரை பயிற்சிகள் வழங்கப்பட்டன.
முத்திரை பயிற்சி
கொரோனா நோயின் முக்கிய விளைவான தாக்கத்தை குறைக்க முத்திரை பயிற்சிகள் வழங்கப்பட்டன. ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க லிங்க முத்திரை பயிற்சி சிறப்பாக அளிக்கப்பட்டது.
நோயாளர்களுக்கு காந்தி சுட்டிகை (வெயிலிற் காய்தல்) முக்கியத்துவம் விளக்கப்பட்டு கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டது.
சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் நோயாளிகள் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கவும், உடலை தேற்றவும் அமுக்கரா மாத்திரை மற்றும் நெல்லிக்காய் லேகியம் அடங்கிய ஆரோக்கியம் பெட்டகம் வழங்கப்பட்டது.
வேறு தொற்று நோய்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க கையில் காப்பாக “வசம்பு காப்பு கயிறு” கட்டிவிடப்பட்டது. இவற்றோடு வீடு திரும்பிய பின் உணவு முறைகளில் மந்தம் இல்லாத உணவுகள் எடுத்துக் கொள்ளவும் ஆலோசனை வழங்கப்பட்டது பால் பொருட்கள்.
இனிப்பு பொருட்கள், தயிர், பகல் தூக்கம், இரவில் கண் விழித்தல் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டது.
இச்சிகிச்சை மையத்தில் 339 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு, நன்முறையில் சிகிச்சை பெற்று நலமாகி வீடு திரும்பினர். 7 நோயாளிகள் மட்டும் மேற்சிகிச்சை தேவைப்பட்ட நிலையில் உயர் சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இச்சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்றோர் தீவிர நிலைக்கு செல்லாமல் தடுக்கப்பட்டதோடு, நோய் தொற்றில் இருந்து விரைவில் குணமடைந்து சென்றனர்.
மூன்றாவது அலையில் குழந்தைகளை அதிகம் தாக்கும் என்பதால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பாதுகாத்திடும் வகையில், உடற்பயிற்சிக்கு உரிய முக கவசம் அணிந்து நடைபயிற்சிக்கு அழைத்து செல்லலாம்.
வெயிலோடு விளையாடும்போது அதிக அளவில் வைட்டமின் ஞி கிடைக்கும். இதற்கு மாலை வெயிலில் சைக்கிள் ஓட்ட அனுமதிக்கலாம். உறக்கம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. இரவு நேரம் விரைவில் தூங்கி காலையில் சீக்கிரம் எழ செய்யலாம்.
தூங்கச் செல்லும் போது பசும்பாலுடன் மிளகு, மஞ்சள் சேர்த்து அருந்த செய்யலாம். மருந்து என பார்க்கும்போது சித்த மருத்துவத்தில் குழந்தைகளுக்கு முன்னெச்சரிக்கையாக தரப்படுவது உரை மாத்திரை (1 முதல் 3வயது) வரையில் இம்மருந்தினை எடுத்து கொள்வதால் இருமல், சளி காய்ச்சலில் இருந்து விடுபடலாம்.
குழந்தைகளின் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும் சுவாச உறுப்புகளின் பாதிப்புகள் குணமாகும். புதிய தொற்று ஏற்படாமலும் பாதுகாக்கும். குழந்தைகளின் வயதிற்கேற்ப தேன் அல்லது பாலில் உரைத்து கொடுக்கலாம்.
பெரிய குழந்தைகளுக்கு (3 முதல் 5 வயது வரை) 1 முதல் 2 மாத்திரை பால் அல்லது வெந்நீருடன் தினமும் 2 வேளை உணவிற்கு பின் கொடுக்கலாம்.
இவை தவிர கஸ்தூரி மாத்திரை, பால சஞ்சிவி மாத்திரை, தாளிசாதி சூரணம், சீந்தில் அதிமதுரம் சேர்ந்த மருந்துகளையும் பஞ்சமுட்டி கஞ்சி, நெற்பொரிகஞ்சி, சுக்கு கஞ்சி, போன்றவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி தேவையானபோது கொடுக்கலாம்.
உணவாக விட்டமின் சி சத்துள்ள பழ வகைகள், ஞீவீஸீநீ சத்துள்ள வேர்கடலை நேந்திரம் பொடியில் ஏலம் சுக்கு கற்கண்டு சேர்த்து கொடுக்கலாம். விட்டமின் சி, கி, தீ3 இரும்பு சத்து பாஸ்பரஸ் சத்துள்ள இலந்தை பழம் சாப்பிட வேண்டும். கொரோனா தொற்றிலிருந்து குழந்தைகளை காப்போம் மூன்றாவது அலையை பயமின்றி கடப்போம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தெரிவித்தார்.
‘பயமெல்லாம் போயிரிச்சி’
இத்திட்டத்தினால் பயன டைந்த கன்னியாகுமரி மாவட்டம், பெருமாள்புரம், இலங்கை அகதிகள் முகாமினை சார்ந்த சொர்ணலதா தெரிவித்ததாவது: எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கு. கடந்த 26.05.2021 முதல் 31.05.2021 வரை நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்துவ கல்லூரி கொரோனா கேர் சென்டரில் சிகிச்சை பெற்று வந்தேன்.
எனக்கு ஏற்கனவே வீசிங் பிரச்சனை உண்டு மூச்சு விட முடியாத நிலை இருந்திச்சு. அவங்களைவிட்டு போயிடுவோமோ என்று இங்கே ரொம்பவே பயத்தே £டு வந்தேன். ஆனால் அந்த பயமெல்லாம் சிகிச்சை பெறும்போது போயிரிச்சு.
இப்ப எந்த பிரச்சனையும் இல்லாமல் நல்ல சுகத்துடனும், நிம்மதியாக இருக்கிறேன் முக்கியமாக நான் சொல்ல வேண்டியது இங்கே சிகிச்சையின் போது ஓமபொட்டணம், ஆவி பிடிக்கிறது, யோகா பயிற்சி, முத்திரா பயிற்சி சொல்லி குடுத்தாங்க.
இங்கு மருத்துவர்களும் ரொம்ப அன்பா இருந்தா ங்க. அதனால் எனக்கு கொரோனா பயமே போயிடுச்சு. இங்கிருந்து போன பின்பு 10 நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்க சொன்னாங்க. இப்போ சந்தோஷமா இருக்கேன்.
இனிமேல் வீட்டின் அருகே உள்ளவர்கள் யாருக்காவது கோவிட் பாதித் தால் சித்த மருத்துவத்தின் அணுகு முறையை எடுத்து கூறி பின்பற்ற சொல்வேன். இத்திட் டத்தை சிறப்பாக செயலாற்றிய முதல்வருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
‘மாற்றிக் கொள்வேன்’
இத்திட்டத்தினால் பயனடைந்த கன்னியாகுமரி மாவட்டம், பெருமாள்புரம், இலங்கை அகதிகள் முகாமினை சார்ந்த மடுசெல்வி தெரிவித்ததாவது:
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை மையத்தில் சித்த மருத்துவ முறைப்படி சிகிச்சை எடுத்துக் கொண்டேன்.
அரசு சார்பாக ஏற்படுத்தப்பட்ட கொரோனா சிகிச்சை மையத்தில் வழங்கப்பட்ட உணவு, மருந்துவகைகள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் சிறந்த அணுகுமுறை, நீராவி பிடித்தல் சிகிச்சை யோகா பயிற்சி போன்றவை ரொம்பவே நல்லாயிருந்தது.
சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி தொடர்ந்து பயிற்சிகள் மற்றும் இயற்கை உணவு பழக்கவழக்கத்திற்கு என்னை மாற்றிக் கொள்வேன்.
நல்ல முறையில் சிகிச்சை அளிக்க வழிவகை செய்த, முதல்வர் அய்யாவுக்கும், மாவட்ட கலெக்டர் அய்யாவுக்கும் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தொகுப்பு
பா.ஜான் ஜெகத் பிரைட்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்.
எஸ்.செல்வலெட் சுஷ்மா,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி)
கன்னியாகுமரி மாவட்டம்.



