கோவை மாவட்டத்தில் புதிதாக மேலும் 216 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 35 ஆயிரத்து 41 ஆக உயர்ந்துள்ளது. கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தலா 70,72,77 வயது முதியவர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு பலியானவர்களின் எண் ணிக்கை 2252 ஆக உயர்ந்துள்ளது.
அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 232 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.
மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 30 ஆயிரத்து 671 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 2118 பேர் சிகிச்சையில் உள்ளனர்.



