fbpx
Homeபிற செய்திகள்கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை துவக்கம்

கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை துவக்கம்

தமிழகத்தில் கொரோனாவின் தாக் கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கல்லூரிகளை திறக்க தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில், கோவை அரசு கலைக் கல்லூரியில் இன்று முதல் மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளது.

நாளை முதல் பொதுவான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அதன்படி நாளை பி.காம் , பி.காம் ஐ.டி. பி.காம் சி.ஏ, பி.பி.ஏ உள்ளிட்ட 4 துறைகளுக்கு மாண வர் சேர்க்கை நடைபெறும் நாளை மறுநாள் அறிவியல் பிரிவில் உள்ள 5 துறைகளுக்கும், கலைப்பிரிவில் 11 துறைகளில் 5 துறைகளுக்கும் அட்மிஷன் நடைபெறும்.

இதே போல் அடுத்தடுத்த நாட்களில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. 1:3 என்ற விகிதத்தில் மாணவர்களை சேர்க்கைக்காக கல்லூரியில் 1433 சீட்டுகள் உள்ளன.

80% மாணவர் சேர்க்கை முடிந்தவுடன் நேரடி வகுப்புகள் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img