மலபார் கோல்டு, டைமண்ட்ஸ் சிஎஸ்ஆர் CSR (கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு) நிகழ்ச்சி, சென்னை தி நகர் மலபார் கோல்டு, டைமண்ட்ஸ் கிளையின் சார்பாக, அடையார் காந்தி நகர் ஆரோக்கிய நிலையத்தில் இரண்டு நாள் நடந்தது.
ஆரோக்கிய நிலையம் மற்றும் உள் சக்கர மாவட்டம் மத்திய சென்னை ஆதித்தியா ஆகியோருடன் இணைந்து இலவச தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
முகாமை வி.எல்.இந்திரா தத் (உலக தெலுங்கு கூட்டமைப்பு, தமிழ்நாடு ஸ்பாஸ்டிக் சொசைட்டி தலைவர்), கமலா செல்வம் (மாவட்ட தலைவர் IWD323), ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இவர்களுடன் மலபார் கோல்டு, டைமண்ட்ஸ் வடக்கு மண்டல தலைவர் அமீர் பாபு பங்கேற்றார்.
முகாமில் 500 டோஸ் இலவச கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இவை தவிர மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான வணிகத்திற்கு அதன் சமூகப் பொறுப்பு முன்முயற்சிகள் இதர காரணங்கள் ஆகும்.
தனது லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை சுகாதாரம், கல்வி, வீட்டு வசதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மகளிரை அதிகார மயமாக்குதல் என சமூக பொறுப்பு திட்டங்களுக்கு செலவு செய்கிறது.



