fbpx
Homeபிற செய்திகள்கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரிக்கு சிறப்புத் தகுதி

கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரிக்கு சிறப்புத் தகுதி

கோவை மாநகரில், பெண்களுக்குக் கல்வி வழங்குதல் என்ற உயர்ந்த குறிக்கோளுடன் திறம்படக் கல்விப் பணியாற்றி வரும் பிஎஸ்ஜி கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரிக்குத் தேசியத் தரமதிப்பீட்டுக் குழுவினரான NAAC , A ++தகுதியை வழங்கினர்.

இக்கல்லூரி 4-வது சுற்றில் தேசியத் தர மதிப்பீட்டுக் குழுவினரிடம் A ++ தகுதி மற்றும் CGPA 3.71 மதிப்பெண்களைப் பெற்றது.

2016-ம் ஆண்டில் நடைபெற்ற தேசியத்தர மதிப்பீட்டின் 3-வது சுற்றில் பெற்ற CGPA 3.58 மதிப்பெண்ணில் இருந்து 4-வது சுற்றில் CGPA 3.71 மதிப்பெண்களாக தரம் அதிகரித்திருப்பது இக்கல்லூரியின் தரத்தைத் தேசிய அளவிலான கல் லூரிகளுக்கிடையில் மேலும் உயர்த்தும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

பாடத் திட்டங்கள் நோக்கில் கல்லூரியின் சிறப்பு, கற்பித்தல் கற்றல், மதிப்பிடுதல், ஆய்வுகள், புதிய விரிவாக்கச் செயல்பாடுகள், உட்கட்டமைப்பு, கற்பதற்கானவளம், மாணவர்கள் ஆதரவு, மாணவர் முன்னேற்றம், நிர்வாக ஆளுகை, தலை மைப்பண்பு, மேலாண்மை மற்றும் கல்லூரியில் பின்பற்றப்படும் உயர்ந்த மதிப்புக்கள், நடைமுறைகள் ஆகிய 7 அளவு கோல்களிலுமே பிஎஸ்ஜி கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி சிறந்த மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.

பிஎஸ்ஜி கிருஷ் ணம்மாள் மகளிர் கல்லூரி ஜி.ஆர்.ஜி அறக் கட்டளையின் கீழ் 1963-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி நிறுவப்பட்டது. இக்கல்லூரியின் அறங்காவலர் ஜி.கோவிந்தராஜூலு, ஸ்ரீமதிசந்திர காந்தியும் ஆவர்.

பெண்கள் கல்வியை நோக்கமாகக் கொண்ட இக்கல்லூரியின் தற்போதைய அறங் காவலராக ஜிரங்க சாமி, டாக்டர் நந்தினியும் திறம்படச் செயலாற்றி வருகிறார்கள்.

கல்லூரிக்குச் செயலர் முனைவர் நா.யசோதா தேவி, முதல்வராக முனைவர் எஸ். நிர்மலா ஆகியோர் நல்லதொரு வழிகாட்டியாகத் திகழ்கிறார்கள். இக்கல்லூரி 59 ஆண்டுகள் பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்டுச் செயலாற்றி வருகிறது.

கல்லூரியில் 35 இளங்கலைகளும், 13 முதுகலைகளும் 13 ஆராய்ச்சிப் படிப்புகளும் உள்ளன. இக்கல்லூரியில் 8500 மாணவிகள் பயில்கிறார்கள். பயிற்சி அனுபவம் வாய்ந்த 350 பேராசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.
கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் வெற்றிப் பயணத்தில் இது ஒரு மைல்கல்.

படிக்க வேண்டும்

spot_img