முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்டம் பற்றிய தகவல்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 3993ல் தொடர்பு கொள்ளலாம் என கோவை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எம்.ஏ. சித்திக் தெரிவித்தார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை, உருளைகிழங்கு மண்டியில், உருளைக் கிழங்குகளை தரம் பிரிக்கும் பணியில் பணியாளர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி உடன் பணியாற்றுவதையும், ஜடையம்பாளையம் காய்கறிமார்க்கெட்ஆகியஇடங்களில்நேற்று(ஆக.11) கோவை மாவட்ட கண்காணிப்பு அலுவலர், அரசு முதன்மை செயலாளர்/வணிகவரித்துறை ஆணையர் எம்.ஏ.சித்திக் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் கோவை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எம்.ஏ.சித்திக் தெரிவித்ததாவது: கோவை மாவட்டத்தில் கொ ரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், கொரோனா தொற்று பரிசோ தனை அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது.
தொற்று பாதித் தவர்களை விரைந்து கண்டறிந்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகளும் விரைவாக நடைபெற்று வருகின்றன.
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்களுக்கு இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பொள்ளாச்சி அரசு மருத்துவமனை, மேட்டுப்பாளையம் அரசு மருத் வமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மேட்டுப் பாளையம் அரசு மருத்துவ மனையில் கொரோனா சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு சிகிச்சை பிரிவு, புற நோயாளி சிகிச்சை பிரிவு, பச்சிளம் குழந்தைகள் பிரிவு, ஆக்ஸிஜன் வசதிகள், கொரோனா நோயாளிகளுக்கு ஏற்படுத்த ப்பட்டுள்ள கூடுதல் படுக்கை வசதிகள்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வரும், சிகிச்சை முறை குறித்து ஆய்வு மேற் கொள்ளப்பட்டது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனி யார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் நலன் கருதி அவர்களின் சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டணத்தை அரசே செலுத்தும் வகையில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி கோவை மாவட்டத்தில் 48 தனியார் மருத்துவமனைகளில் இதுவரை மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
தற்போது முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சையளிக்க தற்காலிகமாக 64 மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக கோவை மாவட்டத்தில் 112 மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற 1874 நபர் களுக்கு சுமார்ரூ.21.57 கோடி மதிப்பில் காப்பீடுநிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள், தங்களிடம் உள்ள கொரோனா சிகிச்சை அளிக்கும் படுக்கைகளில் 10 சதவிகித படுக்கைகளை முதல்வரின் விரிவான காப்பீடு திட்ட நோயாளிகளுக்கு அளிக்க வேண்டும்.
மருத்துவக் காப்பீடு திட்டம் பற்றிய தகவல்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 3993 தொடர்பு கொள்ளலாம்.
கொரோனா தொற்று பரவலை தடுக்க, பொதுமக்கள் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியில் செல்லும் போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.
அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு மாவட்ட கண்கா ணிப்பு அலுவலர் எம்.ஏ.சித்திக் தெரிவித்தார்.
இவ்வாய்வின் போது இணை இயக்குநர் (மருத்துவம்) மரு.சந்திரா, துணை இயக்குநர் (சுகாதாரம்) மரு.அருணா, மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளர் வினோத்குமார், மேட்டுப்பாளையம் அரசு மருத் துவமனை தலைமை மருத்துவர் மரு.கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



