தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் இயக்குநர் சங்கம் சார்பாக, கோவை மாவட்டம் சி.எஸ்.ஐ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தனியார் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரிய, ஆசிரியையாக வேலை பார்த்து, தற்சமயம் கொரோனா தொற்றின் காரணமாக, வேலையை இழந்த உடற்கல்வி ஆசிரிய, ஆசிரியைகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.
விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியை மெர்சி மெட்டில்டா தலைமை தாங்கி பேசுகையில், தம்மிடம் இருப்பதை பிறருக்கு பகிர்ந்து வாழ்வதே சிறந்த மனித பண்பாகும், என்றார்.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் இணைச் செயலாளர் டேனியல் விஜயகுமார், பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில தணிக்கையாளர் அருளானந்தம், சங்கத்தின் புரவலர் செழியன், பேரூர் கல்வி மாவட்டத் தலைவர் ராபர்ட், கோவை கல்வி மாவட்ட சங்க துணைத் தலைவர் ராஜப்பன், சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர் தமிழ்ச் செல்வன், சிவப்பிரகாசம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில், 6000 ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்களும், ஆயிரம் ரூபாய் ரொக்கமாகவும் கோவை, பேரூர் மற்றும் எஸ்.எஸ்.குளம் ஆகிய கல்வி மாவட்டங்களை சார்ந்த 28 உடற்கல்வி ஆசிரிய, ஆசிரியைகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.
நிகழ்வை ஒருங்கி ணைத்த மாநில துணைத் தலைவர் ஆல்பர்ட் அலெக் சாண்டர், மாநில துணைச் செயலர் பன்னீர் மற்றும் சங்கத்திற்கும் நிவாரணம் பெற்றவர்கள் நன்றி தெரி வித்து கொண்டனர்.



