fbpx
Homeபிற செய்திகள்கோவை முதல் கன்னியாகுமரி வரை விழிப்புணர்வு சைக்கிள் பயணம்

கோவை முதல் கன்னியாகுமரி வரை விழிப்புணர்வு சைக்கிள் பயணம்

ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவையில் இருந்து கன் னியாகுமரி வரை 24 மணி நேர மிதிவண்டிப் பயணத்தை தொழிலதிபர் ஞாயிற்றுக் கிழமை துவங்கினார்.

கோவை, ஆர்.எஸ்.புரம் லாலி சாலை பகுதி யைச் சேர்ந்தவர் ஜி.டி. விஷ்ணுராம் (40). தொழி லதிபரான இவர் 24 மணி நேரத்தில் அதிக தூரம் மிதிவண்டிப் பயணம் மேற்கொள்ளும் இலக்கில் கோவை விமான நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டு சேலம், மதுரை வழியாக கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை வரை செல்கிறார்.

24 மணி நேரத்தில் இலக்கை அடையத் திட் டமிட்டுள்ள அவரது மிதி வண்டிப் பயணத்தை விமான நிலைய இயக்குநர் செந்தில்வளவன் ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து துவக்கிவைத்தார்.

இவர், கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அரு கே தனது மிதிவண்டிப் பயணத்தை திங்கள் கிழமை காலை 11 மணிக்கு முடிக்கத் திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்து, ஜி.டி.விஷ் ணுராம் கூறுகையில், மிதிவண்டி ஓட்டுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

இருதய நோய் மற்றும் உடல் பருமன் விழிப்புணர் வுக்காக இப்பயணம் மேற்கொள்வதாகக் கூறினார்.

கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்களைப் பாராட்டும் வகையிலும், அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கிலும் அண்மையில் காரில் 24 மணி நேரத்தில் அதிக தூரம் விழிப்புணர்வுப் பயணம் மேற்கொண்டார்.

இந்தப் பயணத்தில் 2,152.32 கி.மீட்டர் தூரத் தை 20 மணி 40 நிமிடம் 35 விநாடிகளில் எங்கும் நிற்காமல் தொடர் பயணமாக காரை ஓட்டிச் சென்று இந்தியா புக் ஆஃப் ரிகார்ட்டில் பதிவு செய்து பாராட்டுச் சான்றிதழ் பெற்றுள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img