fbpx
Homeபிற செய்திகள்பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பாக 12-ல் மெகா ஏலம் நடத்த திட்டம்

பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பாக 12-ல் மெகா ஏலம் நடத்த திட்டம்

பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பாக வரும் 12-ம் தேதி நாடு முழுவதும் 5,000-க்கும் மேற்பட்ட சொத்துக்கள் பெரிய அளவிலான மெகா மின்-ஏலத்தில் (e-auction) விற்க ஏற்பாடு செய்யப்ப ட்டுள்ளது. இதில் குடியி ருப்பு, வணிக மற்றும் தொழில்துறை பிரிவுகள் அடங்கும்.

வங்கியின் பொது மேலாளரும், தென் மண்டல தலைவருமான மகேந்தர் பெரியசாமி கூறும்போது, நாடு முழுவதும் போட்டி விலையில் சொத்துக்கள் ஏலம் விடப்படுவதால் ஏராளமானோர் இவற்றை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கோவிட் 19 இன் இரண்டா வது அலைக்குப் பிறகு, சொத்துக்களை வாங்க அதிகம் பேர் ஆர்வம் காட்டுவதை, சமீபத்திய பொருளாதார நிலைமை சுட்டிக் காட்டுகிறது.

வங்கி சார்பாக இ-ஏலத்தின் மூலம் விற்கப் படும் சொத்துக்கள், பிறவற்றை ஒப்பிடும்போது விலை குறைவாக வழங்கப் படுகின்றன. மேலும் இந்த ஒப்பந்தத்தின்போது, கமிஷன் போன்ற பிற செலவுகளோ இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அனைத்து ஏலங்களும் e-BIKRAY போர்ட்டலில் செய்யப்படும். இவை எளிமையாகவும் முழுமையாகவும் வெளிப்படையாகவும் இருக்கும் என்று கூறி னார்.

சொத்துக்களை வாங்க ஆர்வமுள்ளவர்கள் லீttஜீs://வீதீணீஜீவீ.வீஸீ போர்ட்டலில் பதிவு செய்து, ஏலப் பணத்தை டெபாசிட் செய்த பிறகு, இதில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img