fbpx
Homeபிற செய்திகள்கட்டணமில்லா கல்வி ஆண்டு வலியுறுத்தி தபால் மூலம் மனு

கட்டணமில்லா கல்வி ஆண்டு வலியுறுத்தி தபால் மூலம் மனு

தமிழகத்தில் கட்டண மில்லா கல்வி ஆண்டாக அறிவிக்க மறுமலர்ச்சி ஜனதா கட்சி சார்பில் தபால்களில் மனு அனுப்பப்பட்டது.

நாடு முழுவதும் கொரோனா உச்சத்தை தொட்ட நிலையில், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளதால், ஆன்லைன் வகுப்பு மட்டும் நடைபெற்று வருகிறது.

ஏழை நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மக் கள் சிறு குறு வணிகம் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் பொருளா தார ரீதியாக பின்தங்கியுள்ள நிலையில் பொரு ளாதாரம் மற்றும் வருவாய் இல்லாமல் தவிக்கின்றனர்.

இந்த காலகட்டத்தில் 2021-2022-ம் ஆண்டிற் கான கல்வி ஆண்டை, கட்டணமில்லா கல்வி ஆண்டாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என மறுமலர்ச்சி ஜனதா கட்சி சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் தமி ழக முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டது.

தருமபுரி தலைமை தபால் நிலையத்தில் இருந்தும் மறுமலர்ச்சி ஜனநாயக கட்சி சார் பில் இன்று மட்டும் சுமார் 300 தபால்கள் அனுப்பப்பட்டன.

இந்நிகழ்வில் மாநிலத் தலைவர் ஜெயக்குமார், மாநில பொதுச் செயலாளர் ஆனந்த் சுப்பிரமணியன், மாநில ஒருங்கிணைப்பாளர் இளவழகன், மாவட்ட செயலாளர் சுசீந்தரன் மற் றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img