fbpx
Homeபிற செய்திகள்கோவையில் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கும் பணி துவக்கம்

கோவையில் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கும் பணி துவக்கம்

கோவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கும் பணி கோவையில் இன்று முதல் துவங்கியுள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து நேற்று முதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், 2021 &-22ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை துவங்கலாம் என்றும் அரசு அறிவித்ததை தொடர்ந்து நேற்று முதல் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில் ஆரம்பப் பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளி வரை மாணவர்களுக்கு இன்று முதல் புத்தகங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை இரண்டு லட்சம் புத்தகங்கள் கோவை வந்தடைந்துள்ளன. புத்தகங்கள் மாணவர்களுக்கு இன்று முதல் விநியோகிக்கப் பட்டு வருகின்றன.மாணவர் சேர்க்கை நடைபெற்று புத்தகங்கள் வழங்கப்பட்டு வந்தாலும், இதுவரை பள்ளி திறப்பு குறித்த அறிவிப்புகள் வெளியாகாத காரணத்தால் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே தற்போதைக்கு நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

படிக்க வேண்டும்

spot_img