Homeபிற செய்திகள்முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை: 40 நாட்களுக்கு பிறகு ஜூன் 21 முதல் பஸ் போக்குவரத்து?

முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை: 40 நாட்களுக்கு பிறகு ஜூன் 21 முதல் பஸ் போக்குவரத்து?

தமிழகத்தில் பொதுமுடக்கத்தில் மேலும் தளர்வுகளை அறி விப்பது மற்றும் நகரப் பேருந்துகளுக்கு அனுமதி அளிப்பது உள்ளிட்ட விவ ரங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனா பரவல் குறைந்த மாவட்டங்களில் முதற்கட்டமாக நகரப் பேருந்துகளை இயக்க அனுமதிப்பது உள்ளிட்ட தளர்வுகளை அறிவிப்பது குறித்து சென்னை தலை மைச்செயலகத்தில் நாளை (சனிக்கிழமை) சுகா தாரத்துறை, மருத்துவ நிபுணர்கள் மற்றும் அமைச்சர்களுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தவிருப்பதாகத் தெரி விக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் நகரப்பேருந்துகளை மட்டும் இயக்க அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.
எனவே இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கியமாக இது பற்றி ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
தமிழக அரசு அறிவித்த தளர்வில் கோவை உள்ளிட்ட 11 மாவட்டங் களைத் தவிர, இதர 27 மாவட்டங்களில் நோய்த்தொற்று குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுடன் கூடுதலாக தளர்வுகள் அளிக்கப்பட்டன.

அழகு நிலையங்கள், சலூன்கள் குளிர்சாதன வசதி இல்லாமலும், ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டது. கோயில்கள், வழிபாட்டு தலங்களில் பொதுமக்களை அனுமதிப்பதற்கான தடை தொடருகிறது.

அதுபோல பொதுப்போக்குவரத்தும் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில், கொரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட் டங்களில் 40 நாட்களக்கு பிறகு வரும் 21ம் தேதி முதல் நகரப் பேருந்துகளை மட்டும் இயக்க அரசு முடிவுசெய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 50 சதவீத பேருந்துகளை மட்டுமே இயக்குவதற்கு ஏற்ப போக்குவரத்து கழகங்கள் ஆயத்தமாக உள்ளதாக தெரிவிக்கப்பட் டிருந்தது.

அரசு டவுன் பஸ்களை இயக்க முன்னேற்பாடுகள் தீவிரம்

பஸ்களை இயக்குவதற்கான ஏற்பாடுகளை அந்தந்த போக்கு வரத்துக்கழகங்கள் செய்யத் தொடங்கிவிட்டன.
கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி குறைந்த அளவில் பஸ்களை இயக்க அரசு திட்டமிட்டுள் ளது. திங்கட்கிழமை முதல் 50 சதவீத பஸ்களை இயக்கவும், அதில் 50 சதவீத இருக்கைகளில் பயணி களை அனுமதிக்கவும் போக்கு வரத்து கழகம் தயாராகி உள்ளது.
முதல் ஒரு வாரத்திற்கு 50 சதவீத பஸ்கள் இயக்கப்படும். அதன் பின்னர் பொதுமக்களின் தேவைக் கேற்ப அதிகரிக்கப்படும். பஸ் நிறுத்தங்களிலும், பஸ்களிலும் கூட்ட நெரிசல் இல்லாமல் பயணிகளை அனுமதிக்கும் வகையில் மாநகர பஸ்கள் இயக்கப்படும்.

இதற்கான அறிவிப்பு நாளை (சனி) வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஓரிரு நாளில் அனைத்து பணிமனை யில் உள்ள பஸ்களையும் கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்தும் பணி நடைபெறும். இது தவிர டிரைவர், கண்டக்டர்கள், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img