Homeபிற செய்திகள்80வது பிறந்த நாளில் இளையராஜா கருணாநிதிக்கு இசைமாலை

80வது பிறந்த நாளில் இளையராஜா கருணாநிதிக்கு இசைமாலை

கோவை கொடிசியாவில் இளைய ராஜாவின் 80வது பிறந்தநாளை முன் னிட்டு இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு இளையராஜாவிற்கு சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய இளையராஜா கலைஞர் கருணாநிதி எனக்கு தந்தைக்கு சமம் எனவும் இளையராஜா என்ற பெயரை நான் வைக்கவில்லை ,சிவன் எப்படி சிவன் வைக்கவில்லையோ அதேமாதிரி தான் எனது தந்தை வைத்த ஞானதேசிகன் என்று பெயர் வைத்ததை கலைஞர் அய்யா இசையுடன் சேர்ந்து கொண்டு எனக்கு அளித்த பெயர் தான் இசைஞானி எனவும் தெரிவித்தார்.

அனைவரின் உணர்வுகளையும் புரிந்து கொண்டவர் தான் கலைஞர் எனவும் அவர் வழியிலேயே முதல்வரும் நாட்டை வழி நடத்தி செல்வது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்தார்.தமிழக மக்களை முன்னேற்ற ஏராளமான பணிகள் செய்தவர் கருணாநிதி அந்த பாதையில் நம்முடைய முதல்வர் செல் கிறார் எனவும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாட்டு மக்களுக்கு செய்வதையெல்லாம் எனக்கு செய்து வருவதாக ஏற்றுக்கொள்கிறேன் எனவும் தெரிவித்தார்.

எனக்கென்று நான் இதுவேண்டுமென்று யாரிடமிருந்து எதுவும் கேட்கமாட்டேன் எனவும் எதற் கும் போனதில்லை என தெரிவித்த அவர் தமிழக மக்களை முன்னேற்ற கலைஞர் பட்ட பாடெல்லாம் அரசியல் வட்டாரத்தில் உங்களுக்கு தெரியும் எனவும் அவரது வழியில் சென்று கொண்டிருக்கிற முதல்வரும் அவரது கனவை நிறைவேற்றி வைப்பார் என தெரிவித்தார்.

கோவை இசை நிகழ்ச்சியில் ஷிறிஙி- ஐ நினைவு கூர்ந்த இளைய ராஜா, என்னுடைய பிறந்த நாளுக்கு அடுத்த இரண்டு நாட்களில் ஷிறிஙிக்கு பிறந்தநாள் வருகிறது.நான் பிறந்த பிறகு இரண்டு வருடங்கள் கழித்து பிறந்தார் என தெரிவித்தார்.

மருத்துவமனைக்கு செல்லும் முன்பு நானும் எஸ்.பி.பியும் மூகாம்பிகை திருக்கோவிலுக்கு சென்றிருந் தோம் எனவும் இப்ப எஸ்.பி.பி இல்லை; அவருடைய மகன் இருக்கிறார் என நினைவு கூர்ந்தார்.

அப்பாக்களின் பை யன்கள் என்னுடைய கச்சேரியில் பாட ஆரம்பித்து விட்டார்கள் எனவும் எஸ்.பி.பி மகன் , மலேசியா வாசுதேவன் மகன் ஆகியோர் என குறிப்பிட்டார்.

தொடர்ந்து இசை நிகழ்ச்சியில் இளைய ராஜா உருவம் படைத்த தங்க நாணயம் வெளியிடப்பட்டது. விரைவில் விற்ப னைக்கு வரும் என மேடையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img