-75 வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு கோவை சரவணம்பட்டி ப்ரோசோன் மாலில் சிறப்பு தள்ளுபடி விற்பனை நடை பெறவுள்ளது.இது குறித்து புரோ சோன் மால் தலைவர் அம்ரிக் பனேஸர், மார்க் கெட்டிங் பிரிவு தலைவர் பிரிங்ஸ்டன் நாதன், செய லியக்க தலைவர் முசாமில் ஐ, செயலியக்கம் மற்றும் சந்தை பிரிவு தலைவர் சி.முரளி ஆகியோர் கூறியதாவது:-இந்திய திருந £ட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 12 முதல் 15 வரை சிறப்பு தள்ளுபடி விற்பனை நடை பெறவுள்ளது.
இதில் வாடிக்கையா ளர்களுக்கு அதிக பட்சமாக 75 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி உள்ளது. மேலும் ரூபாய் 5,999-க்கு பர்ச்சேஸ் செய்பவர்களுக்கு ரூபாய் 500க்கான சிறப்பு உணவு கூப்பன் இலவசமாக வழங் கப்பட உள்ளது.
மேலும் இன்று (12ம் தேதி) குழந்தைகளுக்கான சிறப்பு கலை நிகழ்ச்சிகளும், நாளை (13ம் தேதி) விஜய் டிவி குக்வித் கோமாளி புகழ் பாலாவின் கலை நிகழ்ச்சிகளும், 14 ம் தேதி அன்று விஜய் டிவி சூப்பர் சிங்கர் மற்றும் பின்னணி பாடகர் சாம் விஷாலின் இசை நிகழ்ச்சியும், 15ம் தேதி அன்று குழந்தைகளுக்கு விளையாட்டு மற்றும் போட்டிகளும் நடைபெற உள்ளது.
பொதுமக்கள் அனைவ ரும் இந்த சிறப்பு சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு ப்ரோசோன் மாலின் சேமிப்புக்கான சுதந்திர விழா கால சலு கையை பயன்படுத்திக் கொள்ளுமாறு ப்ரோசோன் மால் நிர்வாகம் அழைக் கிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



