fbpx
Homeபிற செய்திகள்6708 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.384.81 கோடி வங்கிக் கடன் இணைப்பு- நீலகிரி மாவட்ட பயனாளிகள்...

6708 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.384.81 கோடி வங்கிக் கடன் இணைப்பு- நீலகிரி மாவட்ட பயனாளிகள் முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி

நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரகம் மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் 07.05.2021 முதல் 23.05.2022 வரை சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் தனிநபர் வங்கி கடன் இணைப்பு 160 நபர்களுக்கு ரூ.71.89 இலட்சம் மதிப்பிலும், 131 பயனாளிகளுக்கு ரூ.472.09 இலட்சம் மதிப்பில் சுய தொழில் புரியும் சுய உதவிக்குழுக் கடன் இணைப்பினையும், 6708 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.384.81 கோடி மதிப்பில் வங்கிக் கடன் இணைப்பினையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தமிழக முதல்வராக பதவி ஏற்றதில் இருந்து மு.க.ஸ்டாலின், பெண்களின் நலன் கருதி பல திட்டங்களை அறிவித்து வெகு சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
பணிக்கு செல்லும் மகளிருக்கு நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கும் திட்டம், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு கடனுதவிகள் வழங்கும் திட்டம் போன்ற பல திட்டங்களின் வாயிலாக மகளிரின் பொருளாதாரம் மேம்பாடு அடைவதற்கு தமிழக அரசு உறுதுணையாக இருந்து வருகிறது.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சுய உதவிக்குழு இயக்கத்தை மாநிலம் முழுவதும் பரவலாக்கி கல்வி, வேலைவாய்ப்பு பொருளாதார மேம்பாடு மற்றும் சுயசார்பு தன்மை மூலம் பெண்களின் நிலையை மேம்பாடு அடையச் செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் (வாழ்ந்து காட்டுவோம்) ஆகிய மூன்று முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மகளிர் திட்டத்தின் மூலம் புதிய மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைத்தல் சுழல் நிதி, வங்கிகடன் இணைப்பு மற்றும் பெருங்கடன், தனிநபர் கடன், தொழில் முனைவோர் கடன், சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி போன்ற பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மகளிர் எந்த தொழில் செய்தால் வருமானத்தை பெருக்க கூடுமோ அந்த தொழில் செய்வதற்காக கடனுதவிகளை வழங்கி, சமூக பொருளாதார மேம்பாட்டை அடைவதற்கு மகளிரைக் கொண்டு சுய உதவிக்குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகளை உருவாக்கி முறையான பயிற்சிகள் வழங்கி, வருமானம் ஈட்டும் தொழில் தொடங்க வங்கிக் கடன் இணைப்புகள் ஏற்படுத்தி, அரசு சுய உதவிகுழு இயக்கத்தை வலுபடுத்தியும் வருகிறது.

தமிழ்நாடு முதல்வர் 21.05.2022 அன்று நடைபெற்ற உதகை 200 துவக்க விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், 143 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.7.44 கோடி மதிப்பில் வங்கிக் கடன், 1 ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.1 கோடி வங்கி பெருங்கடன் உதவியும், 2 பகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.60 இலட்சம் மதிப்பில் வங்கி பெருங்கடன் உதவிகளையும் வழங்கினார்.

நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரகம் மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் 07.05.2021 முதல் 23.05.2022 வரை சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் தனிநபர் வங்கி கடன் இணைப்பு 160 நபர்களுக்கு ரூ.71.89 இலட்சம் மதிப்பிலும், 131 பயனாளிகளுக்கு ரூ.472.09 இலட்சம் மதிப்பில் சுய தொழில் புரியும் சுய உதவிக்குழுக் கடன் இணைப்பினையும், 6708 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.384.81 கோடி மதிப்பில் வங்கிக் கடன் இணைப்பினையும், முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் 14.12.2021 அன்று பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சியில் 1416 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.85.37 கோடி 7 ஊராட்சி மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.1.74 கோடி மதிப்பிலும் பெருங்கடன் வழங்கப்பட்டுள்ளது. பகுதி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.50 இலட்சம் மதிப்பிலும் பெருங்கடன் வழங்கப்பட்டுள்ளது.

இலவசமாக கிடைத்தது பயிற்சி சம்பளத்துடன் வந்தது பணி
தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் DDU-GKY பயனடைந்த பயனாளி கூறியதாவது:

என் பெயர் சு.சுபாஷினி. நான் பந்தலூர் வட்டம் உப்பட்டி, அத்திக்குன்னா கிராமத்தில் வசித்து வருகிறேன். எனது பெற்றோர் தோட்ட வேலை செய்து வருகின்றனர். அவர்களின் வருமானம் குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை. எனவே நான் குடும்பத்திற்கு உதவுவதற்கு வேலை தேடிக் கொண்டிருந்தேன்.

எனது சொந்த ஊரிலே என் படிப்பிற்கு ஏற்ற எந்த வேலை வாய்ப்பும் கிடைக்கவில்லை. அப்போதுதான் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்டத்தின் மூலம் எங்கள் ஊரில் DDU-GKY யோஜனா திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.

பின்னர் இதில் மூன்று மாதம் திறன்வளர்ப்பு பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல வேண்டும் என்று கூறினார்கள். நானும் இப்பயிற்சி வகுப்பிற்கு சென்றேன்.DDU-GKY மூலம் நடந்த சிறப்பு பயிற்சி வகுப்புகள் அனைத்துமே எனக்கு மிகவும் உதவியாக இருந்தது.

ஏனென்றால்Basic computers, Typing speed and, Communication Skill எல்லாவற்றையும் பற்றி நன்கு அறிந்து கொண்டேன். இப்பயிற்சியின் மூலம் Junior Instrument Technology ஐ பற்றி தெரிந்து கொண்டேன். இந்தப் பயிற்சி வகுப்புகள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

இந்த மூன்று மாத திறன்வளர்ப்பு பயிற்சியில் சீருடை, தங்கும் இடம் மற்றும் உணவு எல்லாவற்றையும் இலவசமாக தந்து, பயிற்சியை சிறப்பாக அளித்தனர். தேர்வு எழுதி நான் பயிற்சி முடித்ததற்கான சான்றிதழையும் பெற்றுக் கொண்டேன். இதன் மூலம் எனக்கு கோவை மாவட்டத்தில் ரூ.12,500/- மாத சம்பளத்துடன் கூடிய வேலை கிடைத்தது.

இது எனக்கு மட்டுமல்லாமல் என் குடும்பத்திற்கு உதவுவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இவ்வேலைவாய்ப்பு பெற்றதன் மூலம் நானும் எங்கள் குடும்பமும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம்.

எங்களைப் போன்ற மகளிருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி, வாழ்வில் ஒளி விளக்கேற்றிய முதல்வருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

ரூ.4.25 லட்சத்தில் தொழில் செய்ய கடனுதவி
சங்கமம் பகுதி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்கள் தெரிவித்ததாவது:
சங்கமம் பகுதி அளவிலான கூட்டமைப்பு உதகமண்டலம் நகராட்சியில் 17 சுய உதவிக் குழுக்களை ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகிறது.

எங்களுக்கு ஏ.எல்.எப் பெருங்கடன் திட்டத்தின் கீழ் 36 தவணையில் செலுத்தும் வகையில் ரூ.4.25 இலட்சம் மதிப்பில் பல்வேறு தொழில்கள் செய்வதற்கு கடனுதவிகள் வழங்கப்பட்டன.

இதில் ஸ்பிரிங் மகளிர் சுய உதவிக்குழு நகர்ப்புற வாழ்வாதார மையம் மூலம் மிளகு, தேயிலைத் தூள் மற்றும் யூகலிப்டஸ் தைலம் போன்றவற்றை பேக்கிங் செய்து வருமானம் ஈட்டி வருகின்றனர்.

இதே போன்று பல்வேறு சுய உதவிக்குழு உறுப்பினர்கள் வங்கி பெருங்கடன் உதவிகளை பெற்று பல்வேறு தொழில்களை செய்து அவர்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்தி வருகின்றனர்.

பெண்கள் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்திலும், மகளிர் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக சுய உதவிக்குழுக்களுக்கு பல்வேறு கடனுதவிகளை வழங்கிய முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.

தொகுப்பு:
நி.சையத் முகம்மத்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
இரா.சரண்,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி),
நீலகிரி மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img