ஐந்து ஆண்டுகளில் அனைத்து ஊராட்சிகளிலும் விவசாயத்தை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 6 மாதத்தில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
கோவையில் கொடிசியா வளாகத்தில் “அக்ரி இன் டெக்ஸ் -2022” வேளாண் கண்காட்சியினை நேற்று (ஜூலை 15) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர் வைத்துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி ஆகியோர் தொடங்கி வைத்து பார் வையிட்டு, “அக்ரி இன்டெக்ஸ் -2022”” புத்தகத்தை வெளி யிட்டனர்.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது:
முதல்வர், வேளாண்மைக்கு என்று தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தார். அதேபோ லவே, வேளாண்மை துறைக்கு என்ற தனியாக நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்யும் வாய்ப்பை முதன்முதலாக எனக்கு வழங்கினார். அதற்கு என் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று வேளாண்மை மதிக்கப்படுகிறது. இக்கண்காட் சிக்கு அதிகமான விவசாயிகள் வருகை தந்துள்ளனர். விவசாயத்தில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் அனைத்து விவசாயிகளிடமும் உள்ளது.
வேளாண் தொழில் நிறுவன ங்கள் மூலம் விவசாயம் சார்ந்த தொழில்நுட்ப பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வெளி மாவட்டங்கள், கிராம ங்களில் உள்ள விவசாயிகள் கண்காட்சிக்கு வருகை தருகி ன்றனர்.
தற்போது விவசாயம் கூலி வேலைக்கு ஆட்கள் குறைவாக உள்ளனர். எ னவே, விவசாயம் தொழில் சார்ந்த தொழில்நுட்ப கருவிகள், விவசாயத்தை நவீனமாயமக்குதல் உள் ளிட்டவை பற்றி அறிந்து கொள்ள இக்கண்காட்சி மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.
புதிய வேளாண் கருவிகள்
செல்போனிலே விவசாயத் திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு மோட்டார் ஆன் செய்யும் கருவி விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள் ளது. இரவு நேரங்களில் இது பாதுகாப்பானதாகவும் உள்ளது.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் சார்பில் புதிய வேளாண் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின் றன. இந்த புதிய கண்டுபிடிப்புகள் பொதுமக்களிடமும், விவசாயிக ளிடம் கொண்டு சேர்ப்பதற்கு இதுபோன்ற கண்காட்சி மிக வும் உபயோகமாக உள்ளது.
கொரோனா காலத்தில் தொழில்நிறுவனங்கள் மூடப்பட் டிருந்தபோதும். விவசாயம் நடைபெற்றது. விவசாயிகள் உழைத்து கொண்டிருந்தனர். ஏனெனில் விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சாப்பாட்டில் கை வைக்க முடியும்.
இக்கண்காட்சியானது விவசாயிகளிடத்தில் நம்பிக் கையை ஊட்டுகின்றன.
தமிழ்நாட்டில் மொத்தம் 12,525 ஊராட்சிகள் உள்ளன.
இந்த ஆண்டு புதிய திட்டமாக, வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், 1997 ஊராட்சிகளை தேர்வு செய்து கலைஞரின் ஒருங்கிணைந்த கிராம வேளாண் மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
5 ஆண்டுகளில் அனைத்து ஊராட்சிகளிலும் விவசாயம் வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 6 மாதத்தில் ஒரு இலட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. இது மிகப்பெரிய சாதனையாகும். இதற்கு மின்சாரத்துறை அமைச்சரை பாராட்டுகிறேன்.
கூடுதலாக 4 லட்சம் ஏக்கரில் விவசாயம்
இதன்மூலம் 3 முதல் 4 லட்சம் ஏக்கர் இடங்களில் கூடுதலாக விவசாயம் செய்யும் வாய்ப்பினால், உற் பத்தி அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இலவச மின்சாரக் கட்டணத்தை அரசு ஏற்று கொண்டுள்ளது. வேளாண்மைத்துறையின் வாயிலாக இலவச மின்ச £ரத்திற்கான சுமார் 6 ஆயிரம் கோடி செலவினை அரசு செலுத்துகிறது.
இந்த ஆண்டு பட்ஜெட்டில் 50,000 பேருக்கு விவசாய மின் இணைப்பு வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் கூடுதலான விவசாயம் செய்யக் கூடிய பரப்பு அதிகரித்துள்ளது. இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
497 நிறுவனங்கள் பங்கேற்பு
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி பேசியதாவது: கோவை மாவட்டத்தில் 20-வது, “அக்ரி இன்டெக்ஸ் -2022” என்ற வேளாண் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.
2000-ம் ஆண்டு முதலாவதாக தொடங்கிய இக்கண்காட்சியில் 150 நிறுவனங்கள் பங்கேற்றன. இதன் மூலம் 25,000 உழவர்கள் பயன்பெற்றுவந்த நிலையில், தற்போது 20 ஆண்டுகளில் இக்கண்காட்சியில் 497 நிறுவனங்கள் பங்கேற்று உள்ளன. 2,00,000-க்கும் மேற்பட்ட உழவர்கள் பயன்பெறும் வகையில் வளர்ச்சியடைந்துள்ளது.
நன்கு வளர்ச்சி அடைந்துள்ள இந்த அக்ரி இன்டெக்ஸ்-க்கு வாழ்த்துகளையும், பாராட்டுக ளையும் தெரிவித்துக் கொள் கிறேன். கோவை மாவட்டத்தில் தொழில்துறைக்கு கொடுக் கும் அதே அளவு முன் னேற்றம், அதே அளவு தொழில்துறையை சார்ந்துள்ள தொழில்முனைவோர்கள் மற்றும் விவசாயத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த தொழில்கள் வளர்ச்சியின் வாயிலாக தொழில் நிறுவ னங்கள் மாவட்டத்தின் வளர்ச் சியில் பெரும் பங்காற்றி வரு கின்றன.
1 லட்சம் விவசாயிகளுக்கு
இலவச மின் இணைப்பு
இலவச மின்சாரத்திற்கு பதிவு செய்து காத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின் இணைப்பு வழங்கும் வகையில் 6 மாதங்களில் 1 லட்சம் விவசா யிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஒரே ஆண்டில் 3 அரசு வேளாண் விவசாய கல்லூரிகள் அறிவிக்கப்பட்டு, அதற்காக இந்த கல்வி ஆண்டிலே மாணவர் சேர்க்கையையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.
4 நாள் கண்காட்சி
கோவை மாவட்டம், கல்வி, மருத்துவம், தொழில் என சிறந்து விளங்கக்கூடிய மாவட்டமாக இருந்தாலும், வேளாண்மைக்கும் முக்கியத் துவம் வழங்கி வருகிறது. இக்கண்காட்சி நான்கு நாட்கள் நடைபெறும். இதன்மூலம் 2 லட்சம் விவசாயிகள் கண்காட்சியில் பங்கு பெறுவ £ர்கள்.
முதல்வரின் இலக்கு இந்தியாவிலேயே முதல் மாநிலம் என்ற நிலையை தமிழ்நாடு அடைய வேண்டும் என்பதாகும். அதற்கு கோவை மக்கள் என்றும் உதவியாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் வி. செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், மாநக ராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.கீதாலெட்சுமி, மாநகராட்சி துணை மேயர் இரா.வெற்றி செல்வன், கொடிசியா தலைவர் வி.திருஞானம், கொடிசியா செயலாளர் ஆர்.சசிகுமார், அக்ரி இன்டெக்ஸ் சேர்மன் என்.கிருஷ்ணராஜ், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச் சாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ந.கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



