fbpx
Homeபிற செய்திகள்30 வயதான வேப்பமரம் ‘பர்லாபிங்’ முறையில் மறுநடவு வேளாண் பல்கலை. விஞ்ஞானிகள் சாதனை

30 வயதான வேப்பமரம் ‘பர்லாபிங்’ முறையில் மறுநடவு வேளாண் பல்கலை. விஞ்ஞானிகள் சாதனை

முப்பது வயதான வேப்பமரத்தை ‘பர்லாபிங்’ முறையில், வேளாண் பல் கலைக்கழக விஞ்ஞானிகள் மறுநடவு செய்தனர்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக தாவரவி யல் பூங்காவின் முன்பகு தியில் நுழைவுவா யில் அமைக்க திட்டமிடப்பட் டது. இங்கு 30 வயதான மிகப்பெரிய வேப்பமரம் நின்றிருந்தது.

இது அங்கு நுழைவுவாயில் கட்ட பெரும் இடையூறாக இருந்தது. இதனால் இம்மரத்தை அடியோடு பெயர்த்து எடுத்து பூங்கா வில் வேறு பகுதியில் நட திட்டமிட்டனர். ‘பர்லா பிங்’ முறையில் இதனை நடவு செய்ய முடிவு செய்தனர்.

இதற்காக மரத்தின் சிறிய கிளைகள் வெட்டப்பட்டு, தண்டில் இருந்து நீராவிப் போக்கினை தடுக்கும் வகையில், மருந்துகள் தெளிக்கப்பட்டன. அதன் மேல் வைக்கோல் வைத்து தைக்கப்பட்டன.

சணல் பைகளால் அவற்றை மூடி, தண்ணீர் தெளித்து, ஈரப்பதத்துடன் வெட்டப்பட்ட பகுதிகள் நன்கு கட்டப்பட்டன.

ஆணிவேருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், பக்கவாட்டு வேர்களை சீராக செதுக்கி, மரத்தின் வேர்களோடு பொக்லைன் இயந்திரம் மூலம் பெயர்த்து எடுக்கப்பட்டது.

பல்கலை தாவரவியல் பூங்காவின் அருகிலேயே நுழைவுவாயில் பகுதியில் வெற்றிகரமாக மறுநடவு செய்யப்பட்டது.

தோட்டக்கலைக் கல்லூரி முதல்வர் டாக்டர் எல்.புகழேந்தி, வேளாண் கல்லூரி முதல்வர் டாக்டர் எம்.கல்யாணசுந்தரம், மலரியல் துறைத் தலைவர் கே.ராஜாமணி ஆகியோர் முன்னிலையில் இந்நிகழ்வு நடந்தது.

படிக்க வேண்டும்

spot_img