fbpx
Homeபிற செய்திகள்3 தேசிய விருதுகள் பெற்று அசத்திய தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை.

3 தேசிய விருதுகள் பெற்று அசத்திய தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை.

தேசிய உயர்கல்வித் திட்டத்தின் கீழ் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன் சில்நடத்திய போட்டிகளில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு பசுமை மற்றும் தூய்மையான வளாகம் உள்பட 3 தேசிய விருதுகள் வழங்கப் பட்டுள்ளன.

தேசியஅளவில் தோட்டக்கலை, வன வியல் மற்றும் மத்திய, மாநில வேளாண் பல்க லைக்கழகங்களுக்கு தேசிய உயர்கல்வித் திட்டத்தின் கீழ் பசுமை மற்றும் தூய்மை வளாக போட்டி இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் 2020 அக்டோபரில் நடத்தப்பட்டது.

இதில் வீணாக தூக்கி எறியப்படும் பொருள் களை மறுசுழற்சி செய்து கையாளுதல், தினசரி மின் தேவைகளுக்கு புதுப்பிக் கவல்ல ஆற்றல் மூலங்களை பயன்படுத்துதல், சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களை வாங்குதல் ஆகியவற்றில் பல்கலைக் கழகங்களின் ஈடுபாடு ஆகியவை மதிப்பீடு செய்யப்பட்டது.

மேலும் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள தோட் டத்தின் பரப்பளவு, கழிவு மேலாண்மை, நீர்ப்பா துகாப்பு, ஆற்றல் சேமிப்பு நடைமுறைகள், பாடங்கள், திட்டங்கள், கருத்தரங்குகள் மற்றும் வளாகத்தில் ஏற்ப £டு செய்யப்பட்டுள்ள சுற் றுச்சூழல் அக்கறை குறித்த பட்டறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் கல்வி நிறுவனங்கள் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதில் மாநில மற்றும் மத்திய பல்கலைக்கழகங் களுக்கு இடையேயான போட்டியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் வேளாண் கல்லூரி மற்றும் ஆ ராய்ச்சி நிலையம் பங் கேற்று 2ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு ரொக்கப் பரி சாக ரூ.8 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

தவிர தேசிய அளவில் நடைபெற்ற வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் முதுகலை படிப்பிற்கான ஊக்கத்தொகைக்கான போட்டித் தேர்வில் தேசிய அளவில் தோட்டக்கலை வனவியல் பிரிவு, வேளாண் பொறியியல் துறையில் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்று இரண்டு துறை மாணவர்களும் 2ஆவது இடத்தைப் பிடித்துள்ளனர். 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சிப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இந்நிலையில், புது டெல்லியில் நேற்று (செவ் வாய்க்கிழமை) நடை பெற்ற இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் மாநில வேளாண் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் கூட்டத்தில் தமிழ்நாடு வேளாண் பல் கலைக்கழகத்துக்கான தேசிய விருதுகளை துணை வேந்தர் நீ.குமாரி டம், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத் தலைவர் திரிலோச்சன் மொஹபத்ரா வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img