fbpx
Homeபிற செய்திகள்293 மாணவர்களுக்கு ஸ்கூல் பேக்: மலேசிய தொழில்அதிபர் வழங்கினார்

293 மாணவர்களுக்கு ஸ்கூல் பேக்: மலேசிய தொழில்அதிபர் வழங்கினார்

பெரம்பலூர் அருகே ப்ளக்ஸ்மேக்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் டத்தோ எஸ். பிரகதீஸ்குமார்,ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் 293மாணவர்களுக்கு ஸ்கூல் பேக்குகளையும் இதர கல்வி உபகரணங்களையும் தமது சொந்த செலவில் இலவசமாக வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் டத்தோ எஸ். பிரகதீஸ்குமார்.இவர் மலேசியா ஆஸ்திரேலியா உள்ளிட்ட அயல்நாடுகளில் ப்ளஸ்மேக்ஸ் நிறுனத்தை நடத்தி வருகிறார்.

வெளிநாடுகளில் வெற்றிகரமான தொழிலதிபராக வலம் வரும் இவர்,பிறந்த ஊரான பூலாம் பாடி கிராமத்தில் உள்ள அரசுபள்ளிக்கு பல உதவிகளை செய்துவருகிறார்.

பூலாம் பாடி அரசுமேல்நிலைபள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கு உதவி,ப்ளஸ் டூ இறுதி தேர்வில் முதல் மூன்று இடம் பிடிக்கும் மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி போன்ற உதவிகளை செய்துவருகிறார்.

மேலும் பூலாம்பாடி கிராமத்தின் வளர்ச்சிக்காக பொதுமக்கள் கேட்கும் அனைத்து வசதிகளையும் செய்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் மலேசியாவில் இருந்து பூலாம்பாடி வந்துள்ள டத்தோ பிரகதீஸ்குமார்,பூலாம்பாடி கிராமத்திற்கு தேவையானவற்றை சொந்த செலவில் செய்து தர பொதுமக்களுடன் ஆலோசித்து வருகிறார்.

இந்த நிலையில் அவர்,பூலாம்பாடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியதொடக்கப்பள்ளியில் பயிலும் 293 மாணவர்களுக்கு இலவசமாக ஸ்கூல் பேக்குகளையும் இதர கல்வி உபகரணங்களையும் தந்து சொந்த செலவில் இலவசமாக வழங்கினார்.

டத்தோ எஸ். பிரகதீஸ்குமார், மாணவர்களிடம் நன்றாக படிக்குமாறு அறிவுறுத்தினார்.பள்ளி ஆசிரியர்கள் வகுப்பறை கட்டடங்களுக்கு வர்ணம் பூசி தருமாறு கேட்டனர்.

அதை செய்து தருவதாக கூறிய டத்தோ எஸ். பிரகதீஸ்குமார், அரசுபள்ளிக்கு வேறு ஏதேனும் வசதிகள் தேவைப்பட்டால் கேளுங்கள் அனைத்தையும் செய்து தர தயாராக இருப்பதாக கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img