fbpx
Homeபிற செய்திகள்27-ம் தேதி ரயில் மறியல் விவசாயிகள் அறிவிப்பு

27-ம் தேதி ரயில் மறியல் விவசாயிகள் அறிவிப்பு

வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கோவை மாவட்டத்தில் வரும் 27-ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்த விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

கோவை ஜவான் பவான் கட்டிடத்தில் உள்ள விவசாய சங்க அலுவலகத்தில் சங்கத் தலைவர் வி.ஆர்.பழனிசாமி தலைமையில் கூட்டம் நேற்று (செப்.7) நடந்தது.

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு கன்வீனர் சு.பழனிசாமி முன்னிலை வகித்தார்.

கடந்த 10 மாதங்களாக, மூன்று புதிய வேளாண்மை சட்டத்தை திரும்பப் பெற நடைபெறும் அகிலஇந்திய அளவிலான முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, கோவை மாவட்டத்தில் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img